For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 டாலர் நோட்டில் அன்னை தெரசா போட்டோவை வையுங்கள்: ஒஹாயோ ஆளுநர் ஜான் பரிந்துரை

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 10 டாலர் ரூபாய் நோட்டில் அன்னை தெரசாவின் புகைப்படத்தை போட வேண்டும் என்று ஒஹாயோ ஆளுநர் ஜான் கசிச் பரிந்துரை செய்துள்ளார்.

2020ம் ஆண்டு 10 டாலர் ரூபாய் நோட்டை புதுசாக வடிவமைக்க அமெரிக்க கருவூலத் துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 10 டாலர் ரூபாய் நோட்டில் இருக்கும் அலெக்சாண்டர் ஹாமில்டன் படத்திற்கு பதிலாக எந்த பெண்ணின் படத்தை வைக்கலாம் என்ற விவாதம் நடந்தது. விவாத நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஒஹாயோ ஆளுநர் ஜான் கசிச், முன்னாள் புளோரிடா ஆளுநர் ஜெப் புஷ் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர்.

Ohio Governor John Kasich Recommends to Put Mother Teresa on 10 Dollar Note

நிகழ்ச்சி மேடையில் பேசிய ஜான் கூறுகையில்,

இது சட்டப்படி செல்லாததாக இருக்கலாம். ஆனால் 10 டாலர் ரூபாய் நோட்டில் அன்னை தெரசாவின் புகைப்படம் தான் வைக்கப்பட வேண்டும். நான் அவரை ஒரு முறை சந்தித்துள்ளேன். நம்மைப் போன்றே நம் சுற்றத்தாரையும் நேசிக்க கற்றுக் கொடுத்தவர் என்றார்.

ஜெப் புஷ் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரின் பெயரை பரிந்துரைத்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உள்ள டொனால்ட் டிரரம்ப், மார்கோ ரூபியோ மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோர் சுதந்திர இயக்கத்தின் தாய் என்று அமெரிக்கா கருதும் ரோசா பார்க்ஸின் பெயரை பரிந்துரைத்தனர்.

விவாத மேடையில் அமர்ந்திருந்த ஒரே பெண்ணான கார்லி பியோரினா கூறுகையில், நான் யாரின் பெயரையும் பரிந்துரைக்க விரும்பவில்லை என்றார்.

English summary
Nobel Peace Prize winner Mother Teresa has been chosen by a prominent US Republican presidential candidate as his preferred choice for the woman to be on a USD 10 note, describing her as an inspiration to everyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X