For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'எங்க அப்பா இறப்பு சான்றிதழ் கொடுங்க': கடிதம் எழுதிய பின்லேடன் மகன்.. மறுத்த அமெரிக்கா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரியாத்: அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இறப்பு சான்றிதழை அமெரிக்காவிடம் அவரது மகன் கேட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110 மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பின்லேடன் கொலை

பின்லேடன் கொலை

இந்தத கோர தாக்குதலில் 3 ஆயிரம் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இதையடுத்து அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடனை வேட்டையாட அமெரிக்கா முடிவு செய்தது. பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றது.

பின்லேடன் மகன்

பின்லேடன் மகன்

இந்நிலையில், ஒசாமா பின்லேடன் மகன் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு ரியாத்துக்கான அமெரிக்க தூதருருக்கு கடிதம் எழுதியதை விக்கீலிக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து எழுதப்பட்ட இந்த கடிதத்தில் பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்டு அவரது மகன் அப்துல்லா பின்லேடன் கடிதம் எழுதியிருந்துள்ளார்.

தர முடியாது

தர முடியாது

அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதர் கிளென் கீஸர், உங்கள் தந்தை ஓசாமா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு கிடைத்தது. அமெரிக்க வெளியுறவு துறையின் சட்ட நிபுணர்கள் இது போன்ற ஆவணங்கள் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். ராணுவ நடவடிக்கையில் நடைபெறும் இதுபோன்ற தனிநபர் கொலைகள் வழக்கமானவைதான், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துக்கு உதவி

குடும்பத்துக்கு உதவி

மேலும், பின்லேடன் கொல்லப்பட்டதால் அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் கைவிடப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்திய நீதிமன்ற ஆவணங்களை பின்லேடன் மகனுக்கு அமெரிக்க தூதர் அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆவணங்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
According to a recently leaked document, the son of al-Qaeda mastermind Osama bin Laden, Abdullah bin Laden, sent a letter to the U.S. Embassy in Saudi Arabia to ask for his father's death certificate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X