For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல் கொய்தாவை நினைத்து நொந்து நூடூல்ஸாகி இறந்த ஒசாமா பின்லேடன்

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: தனது புகழ் மங்கி, தனக்கான ஆதரவு குறைந்துவிட்டதை அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தெரிந்திருக்கிறார். அவர் கவலையுடன் தான் இறந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆபித் நஸிர் வழக்கு விசாரணையின்போது ஒசாமா பின் லேடன் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன. தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை அல் கொய்தா அமைப்பின் இங்கிலாந்து பிரிவின் தலைவர் ஆபித் நஸீர் எதிர் கொண்டுள்ளார். ஒசாமா கொல்லப்பட்ட அபோத்தாபாத் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் கொய்தாவிலேயே தனது புகழ் மங்கிவிட்டதை ஒசாமா அறிந்திருந்தது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் கொய்தா

அல் கொய்தா

ஒசாமா கொல்லப்பட்ட பிறகே அல் கொய்தா அமைப்பு வீழ்ச்சி அடையத் துவங்கியது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் ஒசாமா எழுதிய கடிதங்களில் அல் கொய்தாவின் வீழ்ச்சி ஏற்கனவே துவங்கிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

அல் கொய்தா செயல்படாத அமைப்பாக ஆகி வருகிறது. மேலும் அல் கொய்தா மீது முஸ்லீம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்த விரும்புகிறேன். ஆனால் அமைப்பின் மீது முஸ்லீம்களுக்கு நம்பிக்கை இல்லாதது மற்றும் அமைப்புக்குள்ளேயே பிரச்சனை உள்ளதால் அது முடியவில்லை என்று ஒசாமா தான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

அல் கொய்தா அமைப்புக்குள்ளேயே பிரச்சனை இருந்ததோடு மட்டும் அல்லாமல் கூட்டணி அமைப்புகளுடனும் ஏராளமான பிரச்சனை இருந்தது. அமைப்பு மறுபடியும் மலர்ச்சி அடைய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஒசாமா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கோபம்

கோபம்

அல் கொய்தா அமைப்பின் கவனம் சிதறுவதை நினைத்து ஒசாமா கோபம் அடைந்திருக்கிறார். 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட அல் கொய்தா தான் காரணம் என்று ஒசாமா நம்பியுள்ளார். இதை அல் கொய்தா அமைப்பு மீடியாக்கள் மூலம் மக்களிடம் தெரிவிக்க தவறிவிட்டது என்று ஒசாமா நினைத்துள்ளார்.

அமெரிக்கர்கள்

அமெரிக்கர்கள்

2010ம் ஆண்டில் அமெரிக்கர்களின் கவனம் நலிந்த பொருளாதாரம் மீது சென்றது. இதற்கு காரணம் அல் கொய்தா தான். அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்கள் நடத்தியதால் தான் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்தது என்று ஒசாமா எழுதி வைத்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

2010ம் ஆண்டில் ஒசாமா எழுதிய கடிதங்களில் இருந்து அவர் மனக்கசப்புடன், தனது அமைப்பினரை நம்புவதையே நிறுத்துவிட்டது தெரிய வந்துள்ளது. அரபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தாவை நினைத்து ஒசாமா கவலையில் இருந்துள்ளார். அரபிய தீபகற்பத்தின் அல் கொய்தா தலைவர் ஏமனை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து இஸ்லாமிய மாநிலத்தை உருவாக்க நினைக்கிறார் என்று ஒசாமா கருதியுள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவை தாக்குவது தான் உலகம் முழுவதும் உள்ள அல் கொய்தா ஆட்களின் முக்கிய நோக்கம் என்று ஒசாமா நினைத்துள்ளார். சோமாலியாவைச் சேர்ந்த அல் ஷபாப் பற்றி ஒசாமா கவலை அடைந்துள்ளார். அவர்களால் சோமாலியா கட்டிக்காக்க முடியாது என்று அவர் நினைத்துள்ளார். ஷரியா சட்டத்தை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் தினமும் மக்களின் கைகளை வெட்டுவது நம்பிக்கையை சிதைக்கும் என்று ஒசாமா நினைத்துள்ளார்.

English summary
Osama Bin Laden knew that the dark days for the Al-Qaeda were round the corner. “ There was lack of support for him from the Muslims and the charm was fading away,” a letter written by Osama Bin Laden had revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X