பாஜக தேர்தல் வெற்றி.. மோடிக்கு வாழ்த்து கடிதம் எழுதிய 11 வயது பாகிஸ்தான் சிறுமி! வைரலாகும் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாகூர் : உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அக்யூதாத் நவீத் என்ற சிறுமி வசித்து வருகிறார். 11 வயதான அந்த சிறுமி லாகூரில் கத்தீட்ரல் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

 Pakistani girl writes to PM Modi

இவர் பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தல் வெற்றி பெற்றதற்காக, 2 பக்கம் கொண்ட வாழ்த்துக் கடிதத்தை கடந்த 13ம் தேதி எழுதியிருக்கிறார். இந்த கடிதம் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக, அக்யூதாத் நவீத் கடிதத்தில் கூறியதாவது: சிறு வயது முதலே எனது தந்தை உலக அமைதியின் முக்கியத்துவத்தை எனக்கு சொல்லி கொடுத்து வளர்த்துள்ளார். உ.பி தேர்தல் வெற்றியின் மூலம் இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள்.

அதேபோல் இரு நாட்டிலும் அமைதியை நிலை நாட்டுவதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் இதயங்களை வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிகள் வாங்குவதற்கு பதிலாக நாம் புத்தகங்கள் வாங்க வேண்டும். அதேபோல் தோட்டாக்கள் வாங்குவதற்கு பதிலாக ஏழை மக்களுக்கு மருந்துகளை நாம் வாங்க வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் நல்லுறவை வளர்க்கும் ஒரு சிறந்த பாலமாக மோடி திகழவேண்டும் எனவும் அச்சிறுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Aqeedat Naveed (11), in her letter to the PM, said that governments of Pakistan and India should buy more books, instead of bullets, to start a new chapter of peace between the two countries.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்