For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மியூசியமே வச்சுட்டாங்க பாருங்க... உலகின் முதல் "செல்ஃபி" அருங்காட்சியகம்... மணிலாவில்!

Google Oneindia Tamil News

மணிலா: உலகிலேயே முதன்முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டில் செல்ஃபி அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

செல்போன் மூலம் தங்களைத் தாங்களே படம் பிடித்துக் கொள்ளும் செல்ஃபி தற்போது ஒரு கலையாகவே மாறி விட்டது. அதிலும் குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு இந்த மோகம் சற்று முற்றித்தான் காணப்படுகிறது.

Philippines: World's first selfie museum opened in Manila

எனவே, இவ்வாறு செல்ஃபி எடுக்கும் மக்களுக்காக அந்நாட்டு தலைநகர் மணிலாவில் அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பவர்கள் தங்களுடைய புகைப்படங்களை இந்த அருங்காட்சியக்த்தில் வைத்து அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும், இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கட்டிடங்களில் ஏறி நின்று செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்துக் கொள்ளலாம். இங்குள்ள முப்பரிமாண வகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை தொடலாம். அவற்றுடன் விளையாடலாம்.

இதுதான் உலகின் முதல் செல்ஃபி அருங்காட்சியகம் என்று கூறப்படுகிறது. அடுத்து குரூப்பி அருங்காட்சியகம் தொடங்குவாங்களோ??

English summary
Now also known as the "selfie capital of the world", the Philippines has an art museum that, instead of keeping you away from art pieces, encourages you take selfies with them and share your pictures with the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X