For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவுன்சர் பந்தால் மரணமடைந்த பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்சுக்கு நாளை 26வது பிறந்தநாள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிட்னி: பவுன்சர் பந்தால் தலையில் காயம் பட்டு மரணமடைந்த பிலிப் ஹியூக்ஸ் நாளை தனது 26வது பிறந்தநாளை கொண்டாட தயாராகியிருந்தார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்ரேலியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் அப்பாட் வீசிய பந்தில் தலையில் காயம் பட்டு களத்திலேயே சுருண்டு விழுந்தார் ஆஸ்திரேலியாவின் 25 வயது இளம் பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த ஹியூக்ஸ் இருநாட்கள் கழித்து நேற்று முன்தினம், பரிதாபமாக இறந்தார்.

 Phillip Hughes

இந்த சம்பவம் உலகமெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை கலங்க செய்துள்ளது. மற்றொருபுறம், நாளை பிலிப் ஹியூக்ஸ் 26வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்ற தகவலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1988ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதி, பிலிப் ஹியூக்ஸ் பிறந்தார் என்பதால் நாளை அவருக்கு 26வது பிறந்த நாளாகும். பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுக்கெல்லாம் பிலிப் ஹியூக்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இப்போது நண்பர்களும், உறவினர்களும் இதை சொல்லியே புலம்பியபடி உள்ளனர்.

பிலிப் ஹியூக்ஸ் தலையில் அடிபட்டு வீழும்போது, அவரது தாயும், சகோதரியும் மைதானத்தில் இருந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் மிகுந்த மனவேதனைக்கு உட்பட்டுள்ளனர் அவர்கள்.

English summary
Australian cricketer Phillip Hughes was battling to regain his place on the national Test side when he was felled by a bouncer at the Sydney Cricket Ground. The 25-year-old died from his injuries in a Sydney hospital, surrounded by family and friends. He was due to celebrate his 26th birthday on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X