For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி?

By BBC News தமிழ்
|

போலியோ தடுப்பு சக்தியுடையதாக உருவாக்கும் வகையில் தாவர இலைகளை மாற்றியமைத்து கொள்வதில் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பு மருந்து தயாரிப்பு முறையை மாற்றியமைக்கும் சாத்தியக்கூறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

இத்தகைய செயல்முறையால், செலவு குறைவாகவும், எளிதாகவும், விரைவாகவும் தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என்று நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் கூறியுள்ளனர்.

இதனால், போலியோவை ஒழிப்பதோடு, உலக நாடுகள் திடீரென எதிர்நோக்குகின்ற ஜிகா வைரஸ் அல்லது ஈபோலா போன்ற அச்சுறுத்தல்களுக்கும் இந்த அணுகுமுறை உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் வெற்றிகள் சுவாரசியமானதாகவும், முக்கியமானதாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

போலியோ வைரஸூக்கு எதிர்ப்பாக அமைந்துள்ள இந்த தடுப்பு மருந்து, "வைரஸ் போன்ற துகள்" என்று அழைக்கப்படுகிறது.

இதனுடைய வெளிப்புறத்தை பார்த்தால் போலியோ வைரஸ் போன்று தோன்றுகிறது. ஆனால், மனித பொம்மை வடிவத்திற்கும், உண்மையான மனிதருக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டைபோல உள்புறத்தில் இது வெறுமையாக உள்ளது.

நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தேவைப்படும் எல்லா சிறப்பு அம்சங்களையும் இது கொண்டுள்ளது. ஆனால், நோய்தொற்றை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் எதுவுமில்லை.

"இலை தொழிற்சாலை"

புகையிலை தாவரத்தோடு தொடர்புடைய செடியின் வளர்சிதை மாற்றத்தை தடுத்து நிறுத்தி, மாற்றியமைத்த விஞ்ஞானிகள், அதனுடைய இலையை போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கும் "தொழிற்சாலையாக" உருவாக்கியுள்ளனர்.

முதலில், அந்த தாவரம் பின்பற்றி வளர வேண்டிய புதிய கட்டளைகளை உருவாக்க வேண்டியிருந்தது.

இதனுடைய வெளிப்புறத்தை போலியோ வைரஸாக மாற்றுவதற்கு ஆரம்ப பொருளாக மரபணு குறியீடுகள் இருந்தன.

தாவரங்களை இயற்கையாகவே நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் வைரஸூக்களின் பொருட்களோடு இணைப்பதன் மூலம், இது மேம்படுத்தப்படுகிறது.

இந்த புகையிலையை நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் மண் பாக்டீரியாவிற்கு புதிய கட்டளைகள் வழங்கப்படுகின்றன.

அதில், நோய் தொற்று ஏற்பட்டவுடன், இந்த தாவரங்கள் மரபணு கட்டளைகளை பின்பற்றி, வைரஸ் போன்ற துகள்களை உருவாக்க தொடங்குகின்றன.

நோய் தொற்று ஏற்பட்ட இலைகள் தண்ணீரோடு கலக்கப்படுகின்றன. போலியோ தடுப்பு மருந்து உறிஞ்சப்படுகிறது.

விலங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வைரஸ் போன்ற துகள்கள் போலியோ தாக்குதலை தடுத்துள்ளன. அவற்றின் முப்பரிமாண (3டி) அமைப்பில் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் அவை ஏறக்குறைய போலியோ வைரஸ் போல இருந்தன.

"அவற்றில் நம்பமுடியாத அளவுக்கு சரியான ஒற்றமையை காண முடிந்தது" என்று இந்த ஜான் இன்ஸ் மையத்தின் பேராசிரியர் ஜார்ஜ் லோமோநோஸ்சோஃப் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுவொரு மிகவும் நம்பகரமான தொழில்நுட்பம். தாவரங்களில் இருந்து தடுப்பு மருந்துகளை நாம் பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

தாவரம்
Sean Gallup/Getty Images
தாவரம்

போலியோ தடுப்பு மருந்துக்கு மாற்றான மருந்தை கண்டுபிடிக்கின்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுக்கு உலக சுகாதார நிறுவனத்தால் நிதி ஆதரவு வழங்கப்பட்டது.

உறுப்புக்களை நிரந்தரமாக செயலிழக்க செய்ய காரணமாக இருக்கும் போலியோ, உலகின் பல நாடுகளுக்கு இறந்த காலத்தை சேர்ந்த ஒரு நோயாகும். ஆனால், இந்த நோய் தொற்று இன்னும் அழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தடுப்பு மருந்துகளில் பலவீனமான போலியோ வைரஸை பயன்படுத்துவது, இத்தகைய போலியோ வைரஸ் அதனுடைய அபாயகரமான சில திரிபுகளை பெறும் ஆபத்து நிலவுகிறது. "தடுப்பு மருந்தால் பெற்ற போலியோ வைரஸ்" என்று இது அழைக்கப்படுகிறது.

உயிரியல் தரநிலைகள் மற்றும் கட்டுப்பாடுக்கான ஐக்கிய ராஜ்ஜிய தேசிய நிறுவனத்திலுள்ள முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஆன்ட்ரு மகாடாம் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, "அதிக அளவிலான வாழும் வைரஸூகளால் தற்போதைய தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வைரஸூகள் தற்செயலாக தப்பிக்கும் அச்சுறுத்தலும், மீண்டும் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தும் நிலவுகிறது" என்று கூறியுள்ளார்.

தற்போதைய போலியோ தடுப்பு மருந்துகளுக்கு மாற்றான மருந்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒரு படி நெருக்கமாக இந்த ஆய்வு நம்மை இட்டுசெல்கிறது. வைரஸ் போன்ற துகள், அடிப்படை தடுப்பு மருந்துகளை செலவு குறைவாகவும், பல்வேறு தெரிவுகளோடும் தயாரிப்பதற்கு நமக்கு வசதி வழங்குகிறது.

"மாபெரும் சாத்தியம்"

இந்த தொழில்நுட்பம் போலியோவுக்கு அல்லது தடுப்பு மருந்துக்கு மட்டுமே உரித்தானது என்றல்ல.

சரியான மரபணு தரவு வரிசைகளை விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் வரை, அதிகப்படியான வைரஸூக்களில் இருந்து அவர்கள் தடுப்பு மருந்தை உருவாக்க முடியும்.

புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்க, தாவரங்களையும் விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.

குளிர்கால காய்ச்சல் வைரஸூக்கான புதிய ஆதாரங்களாக தாவரங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கோழி முட்டைகளில் தற்போது, இது வளர்க்கப்படுகிறது. எனவே, இதனை வளர்ச்சியடைய செய்ய பல மாதங்கள் ஆகின்றன.

தாவரம்
TONY KARUMBA/AFP/Getty Images
தாவரம்

கனடா நிறுவனத்தோடு நடத்தப்பட்ட ஒரு சோதனையில், தாவரங்களில் புதிய வைரஸ் மாதிரியை இனம்காண முடியும் என்பதையும், மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் ஒருவருக்கு வழங்கும் தடுப்பு மருந்தை தயாரித்துவிட முடியும் என்பதையும் தெரிய வந்துள்ளதாக பேராசிரியர் ஜார்ஜ் லோமோநோஸ்சோஃப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"சமீபத்தில் நாம் கண்ட ஜிகா, அதற்கு முன்னால் ஈபோலா போல, திடீரென தோன்றுகின்ற தோற்றுநோய்களை தடுக்கின்ற சக்தி கொண்ட தடுப்பு மருந்துகளை உருவாக்கும் சாத்தியக்கூற்றை இது கொண்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

இது மிகவும் எதிர்வினையாற்றக்கூடியதாக இருப்பது இந்த தொழில்நுட்பத்தின் பெரியதொரு சிறப்பம்சமாகும்.

தாவரங்கள் மிகவும் விரைவாக வளரக்கூடியவை. அவை வளர்வதற்கு சூரிய ஒளி, மண். தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு மட்டுமே போதுமானது.

எனவே, தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு மலிவான மற்றும் குறைவான தொழில்நுட்பம் தேவைப்படுகின்ற தீர்வு இதுபாக இருக்கும்.

உயிரை வாட்டும் தொடர் தலைவலிக்கு என்ன மருந்து?

ஆனால், பெரிய அளவில் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் எழக்கூடிய சிக்கல்களை இதில் இன்னும் களைய வேண்டிய நிலையுள்ளது.

தடுப்பு மருந்துக்கு தாவரங்களை பயன்படுத்தும்போது, ஏதாவது ஆபத்து உள்ளதா? என்று பார்ப்பது இன்னொரு பிரச்சனை. புகையிலை தொடர்பான தாவரம் என்றால், அந்த தடுப்பு மருந்தில் நிக்கோட்டின் உள்ளதா? என்று பார்க்க வேண்டியுள்ளது.

"தொடக்க முயற்சிகள் சுவாரசியமாக உள்ளன" என்று கூறியுள்ள லண்டன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தாரிட் முக்ஹோபாதியா, "என்றாலும். தாவரங்களை கொண்டு தடுப்பு மருந்து தயாரிப்போர் வெகு சிலரே. தற்போது தாவரங்களில் இருந்து மனிதருக்கு தடுப்பு மருந்து தயாரிக்க உரிமம் பெற்றிருப்போர் ஏறக்குறைய இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் டெனிஸ் மர்ஃபி. "இதுவொரு முக்கியமான சாதனை" என்று தெரிவித்திருக்கிறார்.

"தடுப்பு மருந்துகளாக தாவரங்கள் தங்களை வெளிப்படுத்துவதை நமக்கேற்ற முறையில் மாற்றி கொள்வதும், புதிய தடுப்பு மருந்துகளை சோதனை செய்வதை நோக்கி சிகிச்சை அளிப்பதை நோக்கி செல்வதும் இப்போது நம்முன் உள்ள சவாலாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
Plants have been "hijacked" to make polio vaccine in a breakthrough with the potential to transform vaccine manufacture, say scientists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X