For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”செக்” வைத்த செல்போன் செக்யூரிட்டி ஆப்- மாட்டிக் கொண்ட கொள்ளைக் கும்பல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டினைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை தன்னுடைய செக்யூரிட்டி சிஸ்டம் மூலம் கண்டுபிடித்து கூண்டோடு காவல் நிலையம் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் டானி வீலர் என்பவர் தனது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் ஆளில்லாத நேரத்தில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, டேனி வீலரின் செல்போனில் எச்சரிக்கை மணி ஒலித்தது.

Police searching for burglars caught on camera by Upper East Side victim

உடனடியாக, செல்போனை எடுத்த அவர் திரையை பார்த்தபோது தனது வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்திருப்பதும், பொருள்களை எல்லாம் கலைத்துப்போட்டு அவர்கள் தேடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசாருக்கு அவர் தகவல் அளித்ததால் அவர்கள் விரைந்து வந்து திருடர்களைக் கைது செய்தனர். "கேனரி" என்ற செக்யூரிட்டி ஆப்பை தனது செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருந்த டேனி வீலர், தனது வீட்டின் கண்காணிப்பு கேமராவை அந்த ஆப்புடன் இணைத்திருந்ததால் இந்த திருட்டை தடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police are searching for two men who burglarized an Upper East Side apartment — a crime the unlucky resident unknowingly filmed, and then posted on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X