For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத்துல இப்படியும் ஒரு பிரதமர் இருக்காரு பாருங்க...!

Google Oneindia Tamil News

ரிகா: என்னதான் நடந்தாலும் ஆடாமல் அசையாமல் அப்படியே பதவியில் இருக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடம் இடிந்து 54 பேர் பலியான சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஒரு நாட்டின் பிரதமர் பதவி விலகியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்திருப்பது லாட்வியாவில். அந்தப் பிரதமரின் பெயர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ். ரிகா நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடம் இடிந்து தரை மட்டமானது. இதில் 54 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.

Post the supermarket disaster, Latvian PM resigns

இந்த நிலையில், வால்டிஸ், நேராக ஜனாதிபதியை சந்தித்து தான் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்பதாக கூறி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு போய் விட்டார்.

பிரதமரே பதவி விலகி விட்டதால் அடுத்து நாட்டில் தேர்தலை நடத்த ஜனாதிபதி உத்தரவிடுவார் என்று தெரிகிறது. பிரதமர் திடீரென விலகி விட்டது லாட்வியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாட்வியா நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் பிரதமர் பதவி விலகியு்ள்ளதால் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Prime Minister Valdis Dombrovskis resigned on Wednesday after the supermarket roof cave-in incident that claimed the lives of 54 people. Amid pressures to find the reason behind the disaster, Latvia's Prime Minister, after meeting the President said,"Considering the tragedy and all related circumstances... a new government is needed that has the clear support of parliament. Therefore I have submitted my resignation from the post of prime minister".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X