For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்களாதேஷில் “பவர் கட்” – இந்தியாவிலிருந்து போகும் பவர் கிரிட் கோளாறு!

Google Oneindia Tamil News

டாக்கா: இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு மின்சாரம் செல்லும் பவர் கிரிட் மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் வங்கதேசம் முழுவதும் இருளில் மூழ்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பழுது ஏற்பட்டதாக வங்கதேச பவர்கிரிட் நிறுவன மேலாண்மை இயக்குனர் மஷும் பெருணி தெரிவித்துள்ளார்.

Power outage across country as national grid collapses

பெருணியின் உதவியாளரான மொடஹர் ஹுசைன் அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களை கொண்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் பவர் கிரிட் இணைப்பில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பொறியாளர்கள் தீவிரமாக செயல்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 2013 லிருந்து 400 கிலோவோல்ட் மின்கடத்தும் பாதை மூலமாக இந்தியாவிடமிருந்து மின்சாரத்தை வங்கதேசம் இறக்குமதி செய்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பஹரம்பூரில் இருந்து தென் மேற்கு வங்கதேசத்தில் உள்ள பெரமரா நகரம் வரை இந்த மின்கடத்தும் பாதை உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Power outage has hit several places in Bangladesh, including the capital Dhaka, due to a collapse in the national grid. Reports of power cut were coming in from several places including Narayanganj, Rangpur, Sirajganj and Sylhet on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X