For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 நாட்கள் அரசுமுறைப் பயணம் - ஸ்வீடன் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 5 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக பெலாரஸ் நாட்டுக்கும் அவர் செல்ல உள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆவார்.

அவரை தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் அந்த நாட்டின் இளவரசி விக்டோரியா வரவேற்றார்.

President Pranab Mukherjee arrives in Sweden for five-day State visit

அதைத் தொடர்ந்து ராயல் அரண்மனையில் ஸ்வீடன் மன்னர் கார்ல் 16 ஆவது கஸ்டாஃப் ராணி சில்வியா ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

அதன்பின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃவென் பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் அன்னா கின்பர்க் பத்ரா ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்தித்து பேச உள்ளார்.

English summary
President Pranab Mukherjee on Sunday arrived on the first leg of his five-day state visit to Sweden and Belarus, the first ever by any Indian head of state, during which a number of key agreements on sustainable development, scientific research are likely to be signed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X