For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உங்கள் பாசத்துக்குரிய ரகுராம் ராஜன்- மீண்டும் சிகாகோவுக்கே திரும்பினார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ரிசர்வ் வங்கி கவர்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரகுராம் ராஜன், மீண்டும் அமெரிக்கா சென்று தனது கல்விப்பணியை துவக்கியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் 2013-ம் ஆண்டு நியமிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி வகித்து வந்தார் தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன். இம்மாத தொடக்கத்தில் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது.

Raghuram Rajan returns to academia

அதனைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ரகுராம் ராஜன், அங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராக தனது கல்விப் பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்பதற்கு முன்னரும் இவர் இதே கல்லூரியில் தான் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். கடண்டஹ் 2001ம் ஆண்டு அங்கு தனது கல்விப் பணியைத் தொடங்கிய ரகுராம் ராஜன், பின்னர் நீண்ட விடுப்பில் வந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றார்.

2008 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவரை இந்திய அரசின் கவுரவப் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். 2003 முதல் 2007 வரை அனைத்துலக நாணய நிதியத்தில் முதன்மை பொருளியலாளராகவும் ரகுராம் ராஜன் இருந்துள்ளார்.

ரகுராம் ராஜனின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர். இவரின் தந்தை டெல்லியில் நடுவண் அரசில் வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் போபாலில் பிறந்து, டெல்லியில் படித்து வளர்ந்தவர்.

English summary
Former RBI Governor Raghuram Rajan has returned to the University of Chicago to resume his role as a ‘Distinguished Service Professor of Finance’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X