For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழியோடு கடற்படைத் தாக்குதலையும் தொடங்கிய ரஷ்யா

Google Oneindia Tamil News

மாஸ்கோ: சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலோடு கடற்படையையும் சேர்த்துத் தாக்கத் தொடங்கியுள்ளது ரஷ்யா.

சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. அதிபர் அசாத் எதிர்த்து போராடும் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

Russian Navy joins Air Force in attacking IS targets in Syria

இதுவரை வான் வழியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குண்டு வீசி தாக்கி வந்த ரஷ்யா, தற்போது போர்க்கப்பல்களையும் களத்தில் இறக்கியுள்ளது.

கடல்வழித் தாக்குதல்...

கஸ்பியன் கடல் பகுதியில் இதற்கென நான்கு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு, 11 இலக்குகளை நோக்கி 26 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு காயமில்லை...

இந்த இலக்குகள் அனைத்தும் சுமார் 1500 கிமீ தொலைவில் இருந்தவை என்றும், தாக்குதலில் திட்டமிட்டபடி இலக்குகள் அனைத்தும் தகர்க்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் காயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வான் வழித்தாக்குதல்...

ஏற்கனவே, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கெதிரான வான் தாக்குதலில் 23 ரஷ்ய போர் விமானங்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

ஆயுதத்தொழிற்சாலைகள் அழிப்பு...

இதுவரை 112 இலக்குகளை ரஷ்ய போர்விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளதாகவும், தீவிரவாதிகளின் 19 தலைமையிடங்களை அழித்துள்ளதாகவும் சோஷி தெரிவித்துள்ளார். அதேபோல 12 ஆயுதக் கிட்டங்கிகளையும் ரஷ்ய போர்விமானங்கள் தாக்கி அழித்துள்ளன. இவை தவிர 71 கவச வாகனங்களையும் ரஷ்யப் படைகள் அழித்துள்ளன. பல ஆயுதத் தொழிற்சாலைகளையும் ரஷ்யப் படைகள் அழைத்துள்ளனவாம்.

மும்முனைத் தாக்குதல்...

இந்த நிலையில் சிரிய ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய ராணுவமும் தாக்குதல் நடத்த தற்போது ஆயத்தமாகி வருகிறதாம் ரஷ்யா. இது நடந்தால் மூன்று முனைத் தாக்குதலில் சிக்கி தீவிரவாதிகள் நிலைகுலைவார்கள் என்று கருதப்படுகிறது.

அதிரடித் தாக்குதல்...

ரஷ்யாவின் இந்த அதிரடித் தாக்குதலால் மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சியில் மூழ்கிப் போயுள்ளன. சும்மா ஒப்புக்கு தாக்குதல் நடத்தி வரும் மேற்கத்திய நாடுகளைப் போல இல்லாமல் உள்ளே இறங்கி அடிக்கும் ரஷ்யாவின் தாக்குதலால் அவை சற்று ஆடிப் போய்த்தான் உள்ளதாக பார்வையாளர்கள் கருதகிறார்கள்.

English summary
Russian warships based in the Caspian Sea have joined the country's air campaign against the Islamic State (IS) in Syria by launching over two dozen cruise missiles on targets of the terrorist group, Russian Defence Minister Sergei Shoigu said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X