For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதி தேர்தல்: முதன்முறையாக களமிறங்கும் பெண்கள்... 900 பேர் போட்டி

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபிய நகராட்சித் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் பெண்கள், தங்களது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் அடுத்தமாதம் 12ம் தேதி நகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் உள்ள அந்நாட்டில் அரசு நிர்வாகத்தில் பெண்களும் பங்கேற்கும் வகையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சித் தேர்தலில் பெண்கள் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

Saudi women candidates begin first election campaigns in conservative kingdom

அதன் தொடர்ச்சியாக 900க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இவர்கள் பிரச்சாரத்தையும் உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர்.

சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன. இதனால், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் மேடையில் பங்கேற்க முடியாது.

அதேபோல், பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது படங்களை தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் போட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

English summary
Saudi women have begun their first-ever campaigns for public office, in a step forward for women's rights in the conservative kingdom's slow reform process. More than 900 women will be standing in the December 12 municipal elections, which will also mark the first time women are allowed to vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X