For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூர்த்தி சிறிசு ஆனால் கீர்த்தி பெரிசு... 15 வயது பையன் கண்டுபிடித்த ஜூபிடர் சைஸ் புதிய கிரகம்!

Google Oneindia Tamil News

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் 15 வயது சிறுவன் ஒருவன் புதிய கிரகம் ஒன்றைக் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளான்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிறுவன் டோம் வாக் (17 ). இச்சிறுவன் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் சஸ்டாபோர்ட்சையரில் உள்ள கீலி பல்கலைக்கழகத்தால் பால் வீதியில் உள்ள கோடிக்கணக்கான நடத்திரங்களின் படங்களை டேட்டாக்களாக கேமரா மூலம் பதிவு செய்யும் பணிக்கு நியமிக்கப் பட்டிருந்தான்.

100 ஒளி ஆண்டு தூரத்தில்

100 ஒளி ஆண்டு தூரத்தில்

அப்போது, 1000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்தான் இவன். நட்சத்திரம் ஒன்றின் அருகில் சின்னப் புள்ளியாக தெரிந்தது அந்தக் கிரகம்.

2 வருடத்திற்குப் பிறகு உறுதி

2 வருடத்திற்குப் பிறகு உறுதி

தற்போது இரண்டு வருட கண்காணிப்பிற்குப் பின்னர் அது ஒரு பெரிய கிரகம் தான் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

ஜூபிடரை விட சிறியது

ஜூபிடரை விட சிறியது

இந்த கிரகம் ஒரு நட்சத்திரத்திற்கு முன்னால் சென்றபோது ஒளி மங்கி காணப்பட்டதை வைத்து விஞ்ஞானிகள் இதை உறுதி செய்து உள்ளனர். மேலும், இந்தப் புதிய கிரகமானது ஜூபிடர் கிரகத்தை விட சிறியது என அவர்கள் கூறுகின்றனர்.

உற்சாகமாக இருக்கும் டாம்

உற்சாகமாக இருக்கும் டாம்

இந்த புதிய கிரகம் கண்டு பிடிப்பு குறித்து டாம் கூறுகையில், ‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளான்.

விஞ்ஞானிகளின் பாராட்டு

விஞ்ஞானிகளின் பாராட்டு

தொழில்முறை வானியலாளர்களை மிஞ்சும் வகையில் சிறுவன் டாம் தனது அனுபவத்தால் புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்ததை விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர்.

சாதனையும் கூட

சாதனையும் கூட

மிகச் சிறிய வயதில் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்த சாதனயையும் டாம் படைத்துள்ளான். தற்போது டாமுக்கு 17 வயதாகிறது.

English summary
A 15-year-old schoolboy Tom WAgg beat professional astronomers by discovering a new planet while on work experience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X