For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்பி எடுக்கப் போய் ஹெர்குலிஸ் சிலையை உடைத்த சுற்றுலா பயணி!

Google Oneindia Tamil News

மிலன்: இத்தாலியில் சுற்றுலா வந்த இடத்தில் செல்பி படம் எடுக்க ஆசைப்பட்டு மிக மிக பழையான ஹெர்க்குலிஸ் சிலையை ஒரு சுற்றுலா பயணி உடைத்து விட்டார். அந்த சிலை சுக்குநூறாக சிதறிப் போனதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விலைமதிப்பற்ற அந்த சிலையானது 1700களில் செதுக்கப்பட்டதாகும். அந்த சிலையின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க அந்த சுற்றுலாப் பயணி முயற்சித்துள்ளார். அப்போது தடுமாறியதில் சிலை உடைந்து சிதறிப் போனது.

வடக்கு இத்தாலியில் உள்ள கிரிமோனா என்ற இடத்தில் இரண்டு ஹெர்க்குலிஸ் சிலைகள் உள்ளன. மிகவும் வரலாற்றுப் புகழ் பெற்ற சிலைகளாகும் இவை. இந்த சிலையில் ஒன்றைத்தான் தற்போது அந்த சுற்றுலாப் பயணி உடைத்துள்ளார்.

இது மார்பிள் கல்லால் செதுக்கப்பட்ட சிலையாகும். இந்த விவகாரம் தொடர்பாக சிலையை உடைத்ததாக இரண்டு பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

13வது நூற்றாண்டைச் சேர்ந்த லோக்கியா டி மிலிட்டி என்ற அரங்கில் இந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மிகப் பெரிய கேடயத்தை ஏந்தியபடி இந்த சிலைகள் நிற்பது போல அமைக்கப்பட்டிருந்தது. கிரிமோனா நகரின் அடையாளச் சின்னமாகவும் இவை திகழ்ந்து வந்தன. ஹெர்க்குலிஸ்தான் இந்த நகரை உருவாக்கியவர் என்று கூறப்படுவதுண்டு.

English summary
Two tourists in northern Italy have landed in the soup after they broke off a piece of a priceless statue of Hercules, which dates back to 1700, while trying to climb it and take a selfie. The tourists had been climbing the 'Statue of the two Hercules', in Cremona, on Friday night when they involuntarily broke off a piece of the marble crown on top of the monument. The two perpetrators have been identified by the police, The Local reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X