For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்மார்ட்போன் இருந்தால் எல்லாம் சாத்தியமே... நிலநடுக்க எச்சரிக்கைக்கு விரைவில் புதிய “ஆப்”!

Google Oneindia Tamil News

லண்டன்: ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி, நிலநடுக்கம் ஏற்பட போவதை பற்றி முன்பே எச்சரிக்கை செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள். அதற்கான அப்ளிகேஷன் தயாரிக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலநடுக்க எச்சரிக்கை கருவிகளை கட்டமைத்து பராமரிக்க ஏகப்பட்ட செலவாகின்றது.

மேலும்,அனைவருக்கும் உரிய நேரத்தில் நிலநடுக்க எச்சரிக்கையை கொடுக்க முடிவது இல்லை.

ஸ்மார்ட்போன் இருந்தா போதும்:

ஸ்மார்ட்போன் இருந்தா போதும்:

ஜி.பி.எஸ். உள்ள ஸ்மார்ட்போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணரும் தன்மையை பெற்றியிருப்பதாக அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் அறிவியல் இதழில் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.

தீவிரமான நிலநடுக்க எச்சரிக்கை:

தீவிரமான நிலநடுக்க எச்சரிக்கை:

ஆனால் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட்போன்களால் உணரமுடியாது. அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான நிலநடுக்கத்தை அவற்றால் முன்னதாகவே உணர்ந்து எச்சரிக்கை செய்யமுடியும்.

புதிய அப்ளிகேஷன் உருவாக்கம்:

புதிய அப்ளிகேஷன் உருவாக்கம்:

இதற்கான புதிய ஆப் உருவாக்கி, அது வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகமாக பாதிக்கப்படும் பல நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

இனி உயிரிழப்புகள் வேண்டாம்:

இனி உயிரிழப்புகள் வேண்டாம்:

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.

English summary
A network of smartphones could deliver early earthquake warnings in areas of the world that are prone to quakes but cannot afford more expensive systems, according to new research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X