For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவின் மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி - 54 பேர் காயம்

Google Oneindia Tamil News

Strong Quake in West China Kills 2; 54 Hurt
பீஜிங்: சீனாவின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்த கடும் நில நடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 54 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்டிங்கிற்கு அருகே இந்த நலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சீன புவியியல் ஆராய்ச்சி மையமோ 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 70 வயது பெண்மணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 54 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் முழுவதும் இடிந்து தரை மட்டம் ஆகி உள்ளது. மேலும் பல வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்நகரத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையமும் சேதமடைந்துள்ளது.

English summary
A strong earthquake struck a lightly populated, mountainous area of western China, killing at least two people, injuring 54 others and collapsing homes, officials said Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X