For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக- பிடிபி கூட்டணிக்கு பாகிஸ்தான் மக்கள் ஆதரவு: 'டான்'

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணிக்கு பாகிஸ்தானில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 60 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தி டான் பத்திரிகையின் இணையதளம் ஆன்லைனில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் பிடிபி -பாஜக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனராம்.

BJP President Amit Shah with PDP President Mehbooba Mufti

மொத்தம் 6475 பேர் கலந்து கொண்டனராம் இந்தக் கருத்துக் கணிப்பில் இதில் 60.23 சதவீதம் பேர் இந்தக் கூட்டணியை ஏற்பதாக கூறியுள்ளனர்.

39.77 சதவீதம் பேர் இந்தக் கூட்டணியை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்ட இவர்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்று இவர்கள் கேட்டுள்ளனர்.

மார்ச் 1ம் தேதி ஜம்மு காஷ்மீர் முப்தி முகம்மது சயீத் தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக அரசில் பாஜக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An online survey carried out by a Pakistani daily today showed more than 60 per cent of the respondents approve of the PDP-BJP coalition government in Jammu and Kashmir. As many as 60.23 per cent of the 6,475 respondents ticked the 'approve' box in the online poll carried out by Pakistani daily, the Dawn, which posted the results on its twitter handle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X