அய்யோ.. 10 மீட்டர் அந்தரத்தில் "சீசா" விளையாடும் கார்கள்... திகில் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: 10 மீட்டர் அந்தரத்தில் இரு கார்கள் சீசா விளையாட்டு விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சீசா என்னும் ஏற்ற பலகை விளையாட்டில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

ஒரு முனையில் ஒருவரும், மறுமுனையில் மற்றொவரும் உட்கார்ந்து கொண்டு அழுத்தம் கொடுத்தால் மறுமுனை உயரும். அதேபோல் மாறி மாறி விளையாடுவர். குழந்தைகள் தவிர பெரியவர்களும் இதுபோல் விளையாடுகின்றனர்.

ஆனால் சீசா விளையாட்டில் இரு கார்கள் விளையாடியது என்றால் நம்புகிறீர்களா? ஆம். சீனாவில் 10 மீட்டர் உயரத்தில் உள்ள ரேம்ப்பில் ஒரு கார் பின்னோக்கி ஏறுகிறது. அதை எதிர்நோக்கி பார்த்தவாறு மற்றொரு காரும் ஏறியது. பின்னர் இரண்டும் சீசா விளையாட்டுகளை விளையாடின. இத்தகைய உயிருக்கு உலை வைக்கும் விளையாட்டை விளையாடுவதற்காக காரை செலுத்திய டிரைவர்களின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Instead of showing two people sitting on either side of the seesaw, this video shows two SUVs 'playing' on it. You'll just have to see it to believe it.
Please Wait while comments are loading...