For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

17 மணி நேர சிட்னி முற்றுகை: ஆஸி.போலீஸ் அதிரடித் தாக்குதல்- தீவிரவாதி சுட்டுக் கொலை! 11 பேர் மீட்பு!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பிணைக் கைதியாக தீவிரவாதி பிடித்து வைத்திருந்த ஹோட்டலுக்குள் அதிரடித் தாக்குதல் நடத்தி 11 பேரை போலீசார் மீட்டனர். இந்தத் தாக்குதலில்தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது பிடியில் இருந்த போது அச்சத்தின் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

சிட்னியின் மார்ட்டின் பிளேஸ் என்ற இடத்தில் லின்ட் சாக்கலேட் ஃகேப் என்ற ஹோட்டலுக்குள் இன்று காலை தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் பலரை பிணைக் கைதியாக பிடித்தான். இந்த பகுதி முழுவதும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. பொருளாதார ரீதியில் முக்கியமான பகுதியாகும் இது. ரிசர்வ் வங்கி அலுவலகம், காமன்வெல்த் வங்கி அலுவலகம் உள்ளிட்டவையும் இப்பகுதியில் உள்ளன என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிரியாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான சபாத் அல் நுஸ்ரா அமைப்பின் கொடியையும் ஹோட்டல் ஜன்னாடிக் கதவில் ஒட்டினான்.

Sydney Hostage Crisis over: Police rescue hostages

பிரதமர் டோனி அப்பாட் அவசர ஆலோசனை

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது குறித்து அப்பாட் கூறுகையில், இது மிகவும் கவலை தரும் சம்பம். அனைத்து ஆஸ்திரேலியர்களும் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைவரும் அமைதியாக இருந்து நிலையை சமாளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

5 பேர் தப்பினர்

இதனிடையே துப்பாக்கி ஏந்திய நபரின் பிடியில் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பி வெளியேறினர்.

17 மணிநேரத்துக்குப் பின்னர் அதிரடித் தாக்குதல்

இப்படி 17 மணிநேரமாக பிணைக் கைதியாக இருந்தவர்களை மீட்க அதிரடியாக தாக்குதல் நடத்தி ஹோட்டலுக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா போலீஸ். அப்போது தீவிரவாதிக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.

Sydney Hostage Crisis over: Police rescue hostages

2 இந்தியர்களும் மீட்பு

இதில் பலர் படுகாயமடைந்தனர். இறுதியாக 11 பேரை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது,

பிணைக் கைதியாக இருந்த இந்தியர்களான இன்போசிஸ் ஊழியர் விஸ்வநாத் ரெட்டி, புஷ்பேந்து கோஸ் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

ஒருவர் உயிரிழப்பு

தீவிரவாதியின் பிடியில் இருந்த போது அச்சத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

ஈரான் தீவிரவாதி சுட்டுக் கொலை

Sydney Hostage Crisis over: Police rescue hostages

இத்தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பொதுமக்களை 17 மணிநேரம் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தது ஈரானைச் சேர்ந்த ஹாரூன் மோனிஸ். ஈரான் அகதி இவர். இவர் மீது பல பலாத்கார வழக்குகள் உள்ளன.

போரில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு துவேஷமாக கடிதம் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டவர். இவர் மீது ஆஸ்திரேலியாவில் பல வழக்குகள் உள்ளன. யூடியூப் மூலம் துவேஷப் பிரசாரத்திலும் ஈடுபட்டவர். அமெரிக்காவும் இவரைத் தீவிரமாக கண்காணித்து வந்தது.

English summary
Australian Police confirmed that the siege ended after 17-hours. 2 people were killed and three were in serious condition as the siege ended. The injured were being treated at a hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X