For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயற்கையை பாதுகாப்பது இந்தியர்களின் பண்பாடு: பாரீஸ் பருவநிலை உச்சிமாநாட்டில் மோடி உரை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பிரான்ஸ்: "பருவநிலை மாற்றம் என்பது உலகு எதிர்கொண்டுள்ள பெரிய சவால். இதை உடனடியாக உலகம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு நாங்கள் காரணம் இல்லை. இயற்கை மற்றும் மனிதர்கள் நடுவே ஒரு சமத்தன்மையை நாம் பேணியாக வேண்டும். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை இம்மாநாட்டில் எடுக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். இந்தியாவில் இயற்கையை தாயாக மதிக்கும் பண்புதான் கலாசாரமாகவே இருந்துவருகிறது. நாம் இன்று பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளோம். எனவேதான், பாரீசில் வெளியாகும் முடிவுக்காக காத்திருக்கிறோம்." என்று பிரதமர் நரேந்திரமோடி, பாரீசில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

tackle climate change arises from our timeless traditions and beliefs: PM

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றடைந்தார்.

COP 21 எ அழைக்கப்படும் இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய நேரப்படி இன்று மாலை மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது: இந்த மாநாடு இந்திய எதிர்காலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய கலாசாரத்தின் ஜன்னல்.

பருவநிலை மாற்றம் என்பது உலகு எதிர்கொண்டுள்ள பெரிய சவால். இதை உடனடியாக உலகம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு நாங்கள் காரணம் இல்லை. இயற்கை மற்றும் மனிதர்கள் நடுவே ஒரு சமத்தன்மையை நாம் பேணியாக வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை இம்மாநாட்டில் எடுக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம்.

இந்தியாவில் இயற்கையை தாயாக மதிக்கும் பண்புதான் கலாசாரமாகவே இருந்துவருகிறது. நாம் இன்று பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளோம். எனவேதான், பாரீசில் வெளியாகும் முடிவுக்காக காத்திருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவின் எரிபொருள் உற்பத்தியில் 40 சதவீதம், இயற்கையோடு இணைந்ததாக மாற்றப்படும்.

உலகம் முழுக்க நன்றாக இருக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

முன்னதாக, பரம்பரா என்ற பெயரிலான பெவிலியன் ஒன்றை பார்வையாளர்களுக்காக மோடி அர்ப்பணித்தார். அதில் இந்தியாவில் எப்படியெல்லாம் இயற்கை வணங்கப்பட்டு வந்தது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

English summary
PM Narendramodi said our commitment to tackle climate change arises from our timeless traditions and beliefs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X