For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் தாக்குதல் நடத்த ரூ.80 கோடி திரட்டியுள்ள ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன்: திடுக் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாரீஸ்: இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களுக்கும், அதுதொடர்பான 'நிவாரண' வேலைகளுக்கும், ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு ரூ.80 கோடியை திரட்டியதாக நிதி ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் எனப்படும் பன்னாட்டு நிதி பரிமாற்றங்களை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாரீசிலுள்ள இந்த அமைப்பு, 'தீவிரவாத நிதி பரிமாற்ற சிக்கல்கள்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த அறிக்கையில், மேலும் கூறியுள்ளதாவது: கடந்த 8 வருடங்களில், ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன் அமைப்பு, 80 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது.

Terror outfit raised over Rs 80 crore in 8 years to fund terror in India

இந்த நிதி பாகிஸ்தான், மண்ணில் வைத்து, பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், ஆடைகள், தகவல் தொடர்புக்காகும் செலவீனங்கள் போன்றவை ஈடுகட்டப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, தீவிரவாத தாக்குதலின்போது, பதிலடியால் பலியாகும், தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகையாகவும், இந்த பணம் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

English summary
Indian investigators have informed the Financial Action Task Force (FATF) in Paris that Hizb-ul-Mujahideen (HM), receiving funds in Pakistan from different channels, raised over Rs 80 crore in the last eight years to carry out terror activities in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X