For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடி பத்திரமாக இறங்கிட்டேன், நன்றி: விமானிக்கு பயணி எழுதிய உருக்கமான கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற பெண் ஒருவர் தன்னை பத்திரமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்து விமானிக்கு எழுதிய கடிதம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது.

பெத்தனி என்ற பெண் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். விமானம் ஸ்பெயினில் பத்திரமாக தரையிறங்கியதும் பெத்தனி ஒரு பேப்பரை எடுத்து விமானிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி அளித்துள்ளார். அந்த கடிதத்தை இங்கிலாந்தில் வசிக்கும் விமானி ஜெய் தில்லன் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஜெய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பயணி ஒருவர் என் சகாவிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ள ஜெய் அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் அந்த பெண் கூறியிருப்பதாவது,

ஜெர்மன்விங்ஸ்

அண்மையில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியாகினர். இந்நிலையில் எங்களை பத்திரமாக அழைத்து வந்த உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மனிதர்கள்

இந்த ரோலர்கோஸ்டர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யும் மனிதர்கள் நாம். இது போன்ற சம்பவங்கள் அதிக பொறுப்புள்ள உங்களைப் போன்றவர்களை தான் அதிகம் பாதிக்கும் என்பது புரிகிறது. அன்பான வார்த்தை நிச்சயம் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

நன்றி

என்னை பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி. பாதுகாப்பாக அழைத்து வந்ததற்கு நன்றி. ஸ்பெயினில் நான் வாழும் வாழ்க்கையை தொடரவும், இங்கிலாந்தில் உள்ள என் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்கவும் உதவியதற்கு நன்றி.

குடும்பம்

என் குடும்பத்தாரை மீண்டும் பார்க்க வைத்ததில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். விரைவில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரை சந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.

புன்னகை

எனது விமான பயணம் அருமையாக இருந்தது. உங்களுக்கும் அவ்வாறே இருக்கட்டும். இன்று இரவு நான் புன்னகை புரிய நீங்கள் தான் காரணம் என பெத்தனி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

English summary
A woman passenger has written a letter to a pilot thanking him for making her journey safe. This letter is going viral in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X