For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னம்மா அங்க சத்தம்.... வானத்துக்கு மேல "சவுண்டு" விட்டது யாரு?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமிக்கு மேலே வானத்தில் 22 மைல் தொலைவுக்கு அப்பாலிருந்து வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. அதை நாசா பதிவு செய்துள்ளது.

20 ஹெர்ட்ஸுக்கும் குறைவான ஒலியிலான இந்த சத்தத்தை அதி நவீன மைக்ரோ போன்கள் துல்லியமாக பதிவு செய்துள்ளன.

இது என்ன சத்தம், எங்கிருந்து வந்தது, யாரால் எழுப்பப்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை. நாசாவிடமும் இதுதொடர்பாக தெளிவான பதில் இல்லை.

பலூன் சோதனை...

பலூன் சோதனை...

கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் கேட்ட மிகவும் துல்லியமான இன்பிரா சவுண்டு ஆகும் இது. நாசாவின் மாணவர் பலூன் சோதனையின்போது இந்த சத்தமானது பதிவாகியுள்ளது.

விசில் சத்த்ச்ம்...

விசில் சத்த்ச்ம்...

பூமியிலிருந்து 36 கிலோமீட்டர் உயரத்தில் சின்னச் சின்ன முனுமுனுப்புகள், விசில் சத்தம் போல இது கேட்டுள்ளது.

இன்பிரா சவுண்டு...

இன்பிரா சவுண்டு...

இன்பிரா சவுண்டு என்பது 20 ஹெர்ட்ஸுக்கும் கீழான அலைவரிசையைக் கொண்டதாகும். இந்த சத்தத்தை சாதாரண மனிதக் காதுகளால் கேட்க முடியாது.

கரோலினா மாணவர்...

வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மாணவர் டேணியல் போமேன் என்பவர்தான் இந்த சத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த சத்தம் எதனால் வந்தது, எங்கிருந்து வந்தது என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

English summary
Mysterious 'infrasounds' have been captured from the edge of space for the first time in 50 years. The sounds were recorded aboard a Nasa student balloon experiment using infrared microphones. The recording features unexplained hisses and whistles heard 22 miles (36km) above the Earth's surface.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X