For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுளுக்குக் கடும் போட்டியாக வரும் பேஸ்புக்கின் ஆட் ஏ லிங்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: புதிதாக பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், தற்போது அத்துறையில் கோலோச்சிவரும் கூகுள் நிறுவனத்திற்கு கடும் போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-போட்டோ எனும் பட்டனுக்கு பக்கத்தில் புதிதாக ஆட் ஏ லிங் எனும் புதிய வசதி தோன்றியுள்ளது. இந்த புதிய வசதி மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தேடும் போது, அது தொடர்பான இணையதள லிங்குகள் கிடைக்கும். அவற்றை நேரடியாக பேஸ்புக்கின் ஸ்டேட்டஸ் பதிவிடும் பகுதியில் பகிர்ந்து கொள்ள முடியும்.

The Facebook Trap: “Add a Link” shuts down Google and your world

இதற்கு முன் ஒரு லிங்கை தேடி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் கூகுள் தேடு பொறிக்கு தான் செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கின் இந்த புதிய வசதி முழுமையான பயன்பாட்டிற்கு வந்து, கோடிக்கான பேஸ்புக் பயனாளர்கள் இதை பயன்படுத்த ஆரம்பித்தால் கூகுளின் விளம்பர வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என அத்துறை நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 70 சதவீத வருவாயை மொபைல் விளம்பரம் மூலம் பெற்றுவரும் பேஸ்புக்கின் வருமானம் இதன் மூலம் பலமடங்கு அதிகரிக்கும்.

English summary
Facebook is currently piloting a new program that allows users to click “Add a Link” when posting status updated. The results returned are from the Facebook ecosystem. You’ll see only articles that have been already shared on Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X