For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

49 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முதல் "ஸ்பேஸ் செல்பி"... ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!

Google Oneindia Tamil News

லண்டன்: சுமார் 49 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் ‘செல்பி' ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

செல்போனில் தன்னை தானே போட்டோ எடுக்கும் ‘செல்பி' முறை தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. செல்பி மறைந்து தற்போது குரூப்பியாக மக்கள் க்ளிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த 1966ம் ஆண்டு விண்வெளியில் எடுக்கப்பட்ட செல்பி ஒன்று லண்டனில் ரூ. 6 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

புஷ் அல்டிரின்...

புஷ் அல்டிரின்...

கடந்த1966ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெமினி 12 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார் நாசா விண்வெளி வீரரான புஷ் அல்டிரின்.

விண்வெளியில் செல்பி...

விண்வெளியில் செல்பி...

அப்போது அங்கு அவர் செல்பி முறையில் விண்வெளியில் போட்டோ எடுத்துக் கொண்டார். அப்புகைப்படம் கடந்த 49 ஆண்டுகளாக பாதுகாக்கப் பட்டு வந்தது.

ஏலம்...

ஏலம்...

தற்போது அப்புகைப்படம் லண்டனில் உள்ள மையத்தில் ஏலம் விடப்பட்டது. சுமார் 10 மணி நேரம் நடந்த ஏலத்தில், அந்த செல்பி போட்டோ ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது. இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 மடங்கு கூடுதலாகும்.

நாசா புகைப்படங்கள்...

நாசா புகைப்படங்கள்...

இந்த ஏலத்தில் இப்புகைப்படம் மட்டுமின்றி, 1917 முதல் 1930-ம் ஆண்டு வரை விண்வெளியில் நாசாவால் எடுக்கப்பட்ட போட்டோக்களும் ஏலம் விடப்பட்டன. அவை மொத்தம் ரூ.5 கோடிக்கு ஏலம் போயின.

English summary
The first 'selfie' taken in space by NASA astronaut Buzz Aldrin in 1966 has fetched almost 6,000 pounds - ten times its estimate - at an auction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X