For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி நிறுவனங்களிலும் பெண்களை விட ஆண்களுக்கு அதிக சம்பளம்: என்னா ஓரவஞ்சனை

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவு சம்பளம் வாங்குவது கிளாஸ்டோர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்கள் முன்னேறிவிட்டார்கள், அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டார்கள் என்று நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் பல துறைகளில் ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்தாலும் பெண்களுக்கு மட்டும் குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அமேஸான், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட 25 பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கிளாஸ்டோர் நிறுவனம் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது.

ஆண்கள்

ஆண்கள்

கிளாஸ்டோர் ஆய்வு நடத்திய 25 நிறுவனங்களில் ஒரே வேலையை பார்க்கும்போதிலும் பெண்களை விட ஆண்களே அதிக சம்பளம் பெறுவது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு பதவியிலும் அவர்களின் அனுபவமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வேறுபாடு

வேறுபாடு

ஆண்கள் வாங்கும் சம்பளத்தில் 78 சதவீதம் தான் பெண்கள் வாங்குகிறார்கள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலெப்மென்ட் வேலைக்கு 3.3 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆண்களுக்கு ரூ.62 லட்சத்து 47 ஆயிரத்து 204 சராசரி அடிப்படை சம்பளமும், 3.2 ஆண்டுகள் அனுபவம் உள்ள பெண்களுக்கு ரூ. 58 லட்சத்து 73 ஆயிரத்து 693 சம்பளமும் வழங்கப்படுகிறது.

கூகுள்

கூகுள்

சில வேலைகளுக்கு ஆண்களை விட பெண்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. உதாரணமாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 3.5 ஆண்டுகள் அனுபவம் உள்ள பெண் சாப்ட்வேர் என்ஜினியர்கள் வருடாந்திர அடிப்படை சம்பளமாக ரூ. 72 லட்சத்து 82 ஆயிரத்து 260ம், 3.9 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆண்கள் அதே வேலைக்கு ரூ. 70 லட்சத்து 23 ஆயிரத்து 481ம் பெறுகிறார்கள்.

ஹிலாரி ஸ்வான்க்

ஹிலாரி ஸ்வான்க்

நடிகைகளை விட நடிகர்கள் 10 மடங்கு சம்பளம் பெறுவதாக ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வான்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். நிறுவனங்கள் தவிர்த்து சினிமாவிலும் நடிகைகளை விட நடிகர்களே அதிக சம்பளம் வாங்குவதை மறுக்க முடியாது.

English summary
According to Glassdoor report, women are earning very less than men for the same job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X