For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெனிசுலாவில் ஓவராக போதைப் பொருளை பயன்படுத்திய 13 கைதிகள் மரணம்

Google Oneindia Tamil News

லாரா: வெனிசுலாவில் உள்ள சிறை ஒன்றில் 13 கைதிகள் அதிக அளவில் போதைப் பொருளை பயன்படுத்தியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவின் லாரா மாநிலத்தில் யுரிபனா சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளை, சிறை அதிகாரிகளும், காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் உணவும் சரிவர தருவதில்லையாம்.

இதனை கண்டித்து கைதிகள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 13 பேர் திடீரென உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், "கைதிகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அதிக அளவில் போதைப் பொருளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதுவே மரணத்திற்குக் காரணம் என்றனர்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

English summary
Venezuela’s government has said that at least 13 prisoners have died of drug overdoses after inmates stormed a prison infirmary during protests demanding better living conditions. Activists on Thursday questioned the official version and said the death toll could be far higher.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X