For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோயுற்ற பிராணிகளை ஆதரவாய் கவனிக்கும் “நர்ஸ்” பூனை – போலாந்தின் ஆச்சரியம்!

Google Oneindia Tamil News

வார்சா: நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் அவற்றின் நோய் குணமாக உதவி செய்யும் அதிசய கருப்பு பூனை ஒன்று போலந்தில் வசித்து வருகின்றது.

ராடேமேனேசா என்கிற அந்த கருப்பு பூனை போலந்தில் உள்ள ஒரு விலங்கு தங்குமிடத்தில் உள்ளது. இரண்டு மாத குட்டியாக இருக்கும் போது சுவாச பையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இந்த விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

This Black Cat Helps Sick Animals. His Bedside Manner is 'Purr'fect

நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகு அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு நர்ஸை போல செயல்பட தொடங்கியது அந்த பூனை.

விலங்கு தங்குமிடத்தில் இருக்கும் நோயுற்ற பிராணிகளை அணைத்துக்கொள்வது, அதுகளின் காதுகளை நக்கி கொடுப்பது, அவற்றின் பக்கத்தில் தங்கி ஆதரவாக இருப்பது என செயல்பட தொடங்கியது. இது அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பெரும்பாலும் பூனைகள் நாய்கள் பக்கத்தில் செல்ல பயப்படும். ஆனால் இந்த பூனை பயப்படாமல் நாய்களுக்கும் உதவி செய்துவருகிறது. மனிதர்களாகி நாம் பூனைகளை பார்ப்பது கூட கெட்ட சகுனம் என கூறி அவற்றின் மீது வெறுப்பை காட்டிவருகிறோம்.

ஆனால் இந்த பூனையோ மனிதர்களுக்கு இருக்கவேண்டிய மேன்மையான பண்புகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A kitty in Poland has taken it upon himself to prove that black cats should no longer be considered harbingers of bad news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X