For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்ரம்ப், ஹிலரியின் கடைசி நேரத்து தேர்தல் பிரச்சார வியூகம்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஹிலரிக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நிச்சயம் வெல்வோம் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகிறார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் ஊர்வலத்திலும் பேசி வரும் ட்ரம்ப், தொடர்ந்து தேர்தலில் முறைகேடு ஊடகங்கள் பாரபட்சம் என்று குற்றம் சுமத்தி வருகிறார். கருத்துக் கணிப்புகள் ஜனநாயகக் கட்சியினரிடம் மட்டுமே நடத்தப்படுகிறது. நான் தோற்றுப்போவேன் என்ற மாயையை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.

Trump and Hillary in last phase campaign

களத்தில் நமக்கே ஆதரவு அலை வீசுகிறது. நம்பிக்கையுடன் இருங்கள். நாம் நிச்சயம் வெல்வோம். அமெரிக்காவின் பெருமையை மீட்டெடுப்போம் என்று தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

அவருக்கு தலைவலி கொடுப்பதற்காக, கிட்டதட்ட தினசரி ஒரு பெண் என்ற நிலையில் புதுசுபுதுசாக தொலைகாட்சியில் தோன்றி, ட்ரம்ப் மீதுபாலியல் குற்றம் சாட்டி வருகிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் தேர்தலுக்கு பிறகு வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்தும் உள்ளார்.

நாடு முழுவதும் முன்னிலையில் ஹிலரி

சி.என். என். / ஓ ஆர் சி நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலரிக்கு 50 சதவீதமும், ட்ரம்புக்கு 45 சதவீதமும் ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒஹாயோ, ஃப்ளோரிடாவில் கடும் போட்டி நிலவிய போதிலும், ஏனைய மாநிலங்களை வென்று அதிபர் ஆகிவிட முடியும் என்று நிலையில் ஹிலரி உள்ளார்.

அரிசோனா, யூட்டா உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் கோட்டையை அசைத்துப் பார்க்கவும், கடும் முயற்சி எடுத்து வருகிறார்.

இந் நிலையில், ஹிலரியின் கவனம் காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கள் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது. சுழற்சி முறையில் காலியாகும் இடங்களுக்கு அதிபர் தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது காங்கிரஸ், செனட் இரு அவையிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இந்த தேர்தலில் அதிக உறுப்பினர்களைப் பெற்று பெரும்பான்மை பலம் பெற்று விட்டால், ஹிலரிக்கு மசோதாக்கள் நிறைவேற்றுவதில் பிரச்சனை இருக்காது.

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன், செனட், காங்கிரஸ் உறுப்பினர்களின் வெற்றிக்காக ஹிலரி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். அதிபர் ஒபாமாவும் அவை உறுப்பினர்கள் போட்டிகளில் தனி கவனம் எடுத்து பிரச்சாரம் செய்கிறார்.

அதிபர் தேர்தல் வெற்றியுடன் காங்கிரஸ் செனட் அவைகளையும் ஜனநாயகக் கட்சிக்கு மீட்டுவிட்டால் ஹிலரியின் வெற்றி மாபெரும் வரலாறாக அமையும்.

- இர தினகர்

English summary
Though the recent opinion polls came against Trump, he is encouraging his cadets to work har to win in real poll. On the other Hand Hillary Clinton is concentration in Senate and Parliament member candidates victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X