For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆறு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது

By BBC News தமிழ்
|

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் பயண தடைக்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)
Getty Images
அமெரிக்காவில் பயண தடைக்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)

இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.

தாத்தா, அத்தை, மாமா, மருமகள், உறவினர்கள் ஆகியோர் "உண்மையான'' உறவுகளாக கருதப்படுமாட்டார்கள்.

இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் மற்றும் அனைத்து அகதிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

அமெரிக்காவில் பயண தடைக்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)
Getty Images
அமெரிக்காவில் பயண தடைக்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)

இந்த புதிய பயண தடை அமலாகிய வாஷிங்டன் நேரம் 20:00 மணிக்கு( இந்திய நேரப்படி காலை 5.30 மணி) சிறிது நேரத்திற்கு முன், பெடரல் நீதிபதியிடம் ஹவாய் அரசு விளக்கம் கேட்டதாகத் தெரிய வந்தது .

கடந்த காலத்தில் ஹவாய் அரசு, அமெரிக்க அரசாங்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி முறையற்ற வகையில் மக்களைத் தவிர்த்து என குற்றம் சாட்டியது.

இந்த வாரத்தொடக்கத்தில், உச்ச நீதிமன்றம் தடையை பாதியளவு உறுதிப்படுத்தி, ஆனால் , அதில் முடக்கப்பட்டிருந்த அதிபரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றின் மீதான தடை விலக்கியது.

ஆறு வரையறுக்கப்பட்ட ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவில் தங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் உள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் அக்டோபரில் தடை மீதான இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்:

புதிய விதிகள்படி, அடுத்த 90 நாட்கள் நெருங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் இல்லாமல் குறிப்பிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

அமெரிக்காவில், பெற்றோர், மனைவி, குழந்தை, மகன் அல்லது மருமகள், அல்லது உடன்பிறப்பு ஆகியோரில் ஒருவர் இருந்தால் அனுமதி உண்டு

தாத்தா, பாட்டி, அத்தை, மாமாக்கள், உறவினர்கள், மருமகன்கள், மாமியார், உறவினர் குடும்பம் மற்றும் பேரப்பிள்ளைகள் போன்றவர்கள் இருந்தாலும் அனுமதி கிடையாது.

புதிய விதிகளின் கீழ், அமெரிக்காவுடன் வர்த்தக மற்றும் கல்வி உறவுகள் கொண்டவர்களுக்கு விதி விலக்கு தரப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
Getty Images
அமெரிக்க அதிபர் டிரம்ப்

வழிகாட்டுதல்களின்படி , ஒரு பயணியின் குறிப்பான உறவு முறையானதாக இருக்க வேண்டும், அமெரிக்காவிற்கும் நுழைவதற்காக ஆவணப்படுத்தப்படும் நோக்கத்திற்காக விதிகளை மீறுவதாக உறவுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஏற்கெனவே செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்டவர்கள் பாதிக்கப்படுவதில்லை

இரட்டைக் குடியுரிமை கொண்ட பயணிகள், இந்தத் தடையால் பாதிக்கப்படாத நாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்திப் பயணித்தால் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அகதிகளுக்கு 120 நாட்களுக்கு தடை விதித்த நீதிமன்றம், அமெரிக்காவில் ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் என ஏதாவது ஒரு தொடர்பை நிரூபிக்க முடியாத அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு அரசு தடை செய்துள்ளதை அனுமதித்துள்ளது.

பிற செய்திகள் :

யு டியூபில் பிரபலமாக நினைத்து விபரீத செயலில் ஈடுபட்ட அமெரிக்க தம்பதியர்

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

BBC Tamil
English summary
People from six mainly Muslim countries and all refugees now face tougher US entry due to President Donald Trump's controversial travel ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X