For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்களை சிரியாவுக்கு அனுப்பிய அமெரிக்கா.. தீவிரவாதிகள் வேட்டைக்கு ரெடி

தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் சிரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஏராளமான நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க போர்க்கப்பல்கள் சிரியா வந்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப் இக்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் ரக்கா நகரை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் அதை தங்கள் தலைநகரமாக அறிவித்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் சிரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனுள் ஆயுதங்களும் உள்ளன.

US deployed hundreds of Marines to Syria to fight ISIS

ஒபாமா நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி சிரியாவில் அமெரிக்காவை சேர்ந்த வீரர்கள் அதிகபட்சமாக 500 பேரைத்தான் நியமிக்க முடியும். ஆனால் ட்ரம்ப் தற்போது கூடுதலாக 500 வீரர்களை சிரியாவுக்கும், ஆயிரம் பேரை குவைத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார். குவைத்துக்கு தேவைப்படும்போது இப்படைகளை அந்த நாடு பயன்படுத்த முடியும்.

சிரியா நாட்டு அரசு படை ரக்கா நகரை மீட்க போராடி வருகிறது. அந்த படைக்கு அமெரிக்க படை உதவி செய்யும். ஈராக்கில் நடத்தப்பட்ட அதிரடியை போல சிரியாவில் அமெரிக்க வீரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

English summary
Hundreds of US Marines have arrived in Syria to establish an outpost in support of the operation to retake the city of Raqqa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X