For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் வேட்பாளர் நேரடி விவாதம்... யாருக்கு வெற்றி?- ஒரு அலசல் #USPresidentialDebate

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): 2016அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் வேட்பாளர் விவாதம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி அமெரிக்க அரசியல் ஆர்வலரும், பள்ளிக் கல்வி மாவட்டத்தின் தன்னார்வலருமான ஸ்டாலின் மைக்கேல் ஒன்இந்தியாவுக்காக எழுதியுள்ள பிரத்தியேகக் கட்டுரை இது.

ஸ்டாலின் அமெரிக்காவில் 16 வருடங்களாக இருக்கிறார். டல்லாஸ் மாநகரத்தின் இர்விங் நகரில் தற்போது வசித்து வரும் அவர், அங்குள்ள பள்ளி கல்வி மாவட்ட தேர்தலில் போட்டியிட்டார். கல்வி மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

US elections: Who wins in the first Presidential debate?

அமெரிக்க அரசியலை மிகவும் உன்னிப்பாக கவனித்து வரும் ஸ்டாலின், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட உள்ளூர் அரசியலில் பங்கேற்க வேண்டும். கல்வி மாவட்டம், நகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் வெற்றி பெற்று,கல்வி மாவட்ட- நகராட்சி நிர்வாகத்தில் நமது உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை http://www.michaelforschoolboard.com/ இணையதளத்தில் காணலாம்.

ஸ்டாலின் மைக்கேலின் பார்வையில் முதல் அதிபர் வேட்பாளர் விவாதம்...

புதுசா ஒன்னும் இல்லே

பொதுவாக அதிபர் வேட்பாளர் விவாதத்தில் இரு தரப்பினரும், தாங்கள் அதிபர் ஆகும் பட்சத்தில் என்ன செய்வோம் என்பது குறித்து புதிய வாக்குறுதிகளையோ, அல்லது திட்டங்களையோ கூறுவார்கள்.

திங்கட்கிழமை நடைபெற்ற விவாதத்தில் ஹிலரி க்ளிண்டனும் டொனால்ட் ட்ரம்பும் புதிதாக எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை.தேர்தல் மேடைகளிலும் தொலைக்காட்சியிலும் அன்றாடம் காணும் அதே குழாயடிச் சண்டை போன்ற காட்சிகள் தான் விவாதத்திலும் காண முடிந்தது.

US elections: Who wins in the first Presidential debate?

ஹிலரி சாமர்த்தியமாக அவருடைய தவறுகளையும், பிரச்சனைகளையும் தவிர்த்தார். ட்ரம்ப் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிய குற்றச்சாட்டுகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வதிலேயே நேரத்தைச் செலவிட்டார்.

வெடிபொருட்கள் குறைவாக இருந்தாலும் வேகமான துப்பாக்கி போல் ஹிலரியின் பேச்சு வீரியம் மிக்கதாக இருந்தது. வேகம் குறைந்த துப்பாக்கியுடன் அதிக வெடிபொருட்கள் இருந்தால் என்ன பயனோ, அப்படி இருந்தது ட்ரம்பின் அணுகுமுறை.

பொருளாதாரமும் தேச பாதுகாப்பும்

ஹிலரியின் பொருளாதார கொள்கைகள் மிகவும் பலவீனமாகவும், பாதுகாப்பு, இனவாத அரசியல் உள்ளிட்டவைகளில் ட்ரம்ப் மிகவும் பலவீனமானவராகவும் காணப்பட்டார்கள்.

மற்றுமொரு அரசியல்வாதியாக, அதிபர் பதவியைப் பற்றிய அக்கறையும், பொதுமக்கள் பற்றிய எண்ணங்கள் குறைவானவராகவும் ஹிலரி தெரிந்தார். போராட்ட குணமிக்க தொழிலதிபராகக் காட்சி அளித்த ட்ரம்ப், அரசியல் நெளிவு சுளிவு தெரியாமலும் புரியாமலும் பல கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவிட்டார்.

கேட்கப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் தனது பலவீனத்தை உணர்ந்த ஹிலரி, அவருடைய பாயிண்டுகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ட்ரம்ப் எல்லா பக்கமும் சுழட்டி அடித்து வந்தாலும் கேட்ட கேள்விகளைக்கான பதில்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கூறினார்.

முடிவு என்ன?

ஆபரேஷன் சக்சஸ் நோயாளி மரணம் என்பதைப் போல் ஹிலரியின் வாதம் இருந்தது. இறந்து போனவருக்கு சிபிஆர் கொடுத்து உயிர்பிழைக்க வைக்கும் முயற்சிபோல் ட்ரம்பின் வாதம் இடம் பெற்றது.

ஒட்டு மொத்த விவாதத்தில் அவர்களுடைய பங்களிப்பைப் பார்த்தால் ஹிலரி பத்துக்கு எட்டு பாயிண்டுகளும், ட்ரம்ப் பத்துக்கு ஐந்து மதிப்பெண்கள் என்று கூறலாம்.

ஆட்சித் திட்டங்கள் போன்றவற்றில் ஹிலரி 6 மதிப்பெண்கள் என்றால் ட்ரம்புக்கு 7 மதிப்பெண்கள் தரலாம். இந்த விவாதத்தால் இருவருக்கும் புதிய வாக்காளர்கள் கிடைக்கப்போவதில்லை. 26 வருட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக எதிர் கொண்ட ஹிலரிக்கு பாராட்டுகள். எந்த அரசியல் அனுபவமும் இல்லாமல் முதன் முதலாக தேசிய அளவிலான விவாதத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர் கொண்ட ட்ரம்பும் பாராட்டுக்குரியவர்.

90 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டவர்கள்தான். மீதம் உள்ள பத்து சதவீதத்தினர் பொருளாதாரம், பாதுகாப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்தவகையில் அவர்களில் சிலரையாவது ட்ரம்ப் முதல் விவாதம் மூலம் வென்றிருக்கக்கூடும்.

- ஒன்இந்தியாவுக்காக இர தினகர்

English summary
Who won in the Presidential debate that held a couple of days back? Hillar or Trump? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X