For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசு தின விழா தலைமை விருந்தினர்: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் அமெரிக்கா அதிபர் ஒபாமா!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்/டெல்லி: நாட்டின் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அமெரிக்கா அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளது.

டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் ஜோஸ் எர்னெஸ்ட் வெளியிட்ட அறிக்கை, இந்திய குடியரசு தின விழா விழாவில் முதல் முறையாக அமெரிக்கா அதிபர் கலந்து கொள்வதை கவுரவமாக அமெரிக்கா அதிபர் ஒபாமா கருதுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

US Prez gets Modi’s Republic Day invite, says yes

இதேபோல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளாறிக்கை, அமெரிக்கா பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, குடியரசு தின நிகழ்வில் அமெரிக்கா அதிபர் ஒபாமா கலந்து கொள்ள தூதரக உறவுகள் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். இதனடிப்படையில் முறைப்படியான எழுத்துப்பூர்வமான அழைப்பு அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் இந்தியாவுக்கு வருகை தர ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதலாவது அமெரிக்க அதிபர் என்பதுடன் இந்தியாவுக்கு 2 முறை பயணம் மேற்கொண்ட முதலாவது அமெரிக்க அதிபரும் ஒபாமாதான் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

English summary
US President Barack Obama has accepted Prime Minister Narendra Modi's invitation to be the chief guest at Republic Day celebrations on January 26 in New Delhi. This will be the first time when a US President will be the guest of honour at an event that both India and the United States hold close to their hearts - the founding day of the Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X