For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

239வது சுதந்திர தினம்: ஹேப்பி பர்த்டே அமெரிக்கா!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): இன்று ஜூலை 4... ஒவ்வொரு அமெரிக்கரும் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் சுதந்திர தினம்.

கட்சிகள் வேறு வேறு என்றாலும் சுதந்திர தினம் என்று வந்து விட்டால் 'ஒரே அமெரிக்கன்' என்ற முழக்கத்தை அனைத்து அமெரிக்கர்களிடமும் காணலாம்.

பிரிட்டன் பிடியிலிருந்து விடுதலை

பிரிட்டன் பிடியிலிருந்து விடுதலை

இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4. முன்னதாக ஜூலை 2ம் தேதி பதிமூன்று மாநிலங்களும் கூட்டாக விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றினர். தாமஸ் ஜெஃபர்சன் ஐ தலைவராகக் கொண்ட ஐந்து பேர் குழு வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிரகடனத்தை எழுதினார்கள்.

நீங்களே சொன்னா எப்படி?

நீங்களே சொன்னா எப்படி?

அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து இரண்டு தடவை தாக்குதல் நடத்தியுள்ளது. 1800 களின் முற்பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில் தலை நகரத்தை கைப்பற்றியும் உள்ளார்கள். மற்றொரு தாக்குதலில் தலைமைச் செயலகத்தை தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள்.

இன்னமும் மறைமுக ஆதிக்கம்?

இன்னமும் மறைமுக ஆதிக்கம்?

விடுதலை அடைந்து பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்துடனும் உலகிற்கே பெரியண்ணன் ஆகிவிட்ட அமெரிக்காவுடன், தற்போது நண்பன் என்று உரிமை கொண்டாடுகிறது இங்கிலாந்து. அமெரிக்காவும் அதை ஏற்றுக்கொண்டு எங்கள் முதல் நண்பன் இங்கிலாந்து என அடிக்கடி கூறுகிறது.

ஆனால் இந்திலாந்து மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் சில அமெரிக்கர்களால் முன் வைக்கப்படுகிறது. அமெரிக்கா என்பது ஐரோப்பா முழுவதிலிருந்தும் வந்து குடியேறியவர்களால் உருவான நாடு. தற்போது நண்பன் என்று கொண்டாடும் மீடியா, முக்கிய தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் இன்னமும் இங்கிலாந்துகாரர்கள் கையில் இருப்பதால், அதன் மூலம் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்திகிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

தற்போது ஜூலை 4 என்பது அமெரிக்கர்களின் முக்கிய நாளாகும். அன்றைய தினம் நண்பர்கள் உறவினர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். சிறு நகரம் முதல் பெரிய நகரம் வரை சிறப்பு ஊர்வலம், வாண வேடிக்கை என அமெரிக்காவே வண்ணமயமாக மாறிவிட்டது. சில நகரங்களின் வாணவேடிக்கையை பார்ப்பதற்காக விமானங்கள் மூலம் வெளியூர் வாசிகள் வருவதும் உண்டு. மக்களும் அன்றைய தினம் பட்டாசுகளை வாங்கி தங்கள் பகுதிகளில் கொளுத்தி கொண்டாடுகிறார்கள்.

லாபம் சீனாவுக்குதான்

லாபம் சீனாவுக்குதான்

இது எல்லாமே சீனப் பட்டாசுகள் என்பதுதான் இங்கே முக்கிய அம்சம். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை அனுமதிக்காத அமெரிக்கா, சிறுவர்களின் உழைப்பால் உருவாகும் சீனப் பட்டாசுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வைத்திருப்பது முரண்பாடகவும் இருக்கிறது.

இந்த கொண்டாட்டம் மூலம் சீனாவுக்கு கிடைக்கும் பில்லியன் கணக்கில் டாலர் வருமானம், அமெரிக்காவுக்கு இழப்பு என்ற நிலையை அமெரிக்கர்கள் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை என்று வேதனைப்படுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஜூலை 4

ஜூலை 4

சுதந்திர தினம் என்று அழைக்கப்பட்டது மாறி தற்போது 'ஜூலை 4' என்றாகிவிட்டது. ஜூலை 4 என்றாலே அமெரிக்க சுதந்திர தினம் என்று அர்த்தம் என கூகுளும் குறிப்பிடுகிறது.

English summary
United States of America is celebrating their 239th Independence Day Today, Fourth of July--
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X