For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி ஈராக்கில் இருப்பதாக வெளியான வீடியோவால் பரபரப்பு

Google Oneindia Tamil News

மோசூல், ஈராக்: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கீர் அல் பக்தாதி ஈராக்கில் இருப்பதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கின் 2வது பெரிய நகரான மோசூல் நகரில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் அல் பக்தாதி இருப்பது போல இந்த வீடியோவில் காட்சி உள்ளது. இதுதான் பெரிய மசூதிக்கு அவர் முதல் முறை சென்றது என்றும் கூறப்படுகிறது.

ஜூலை 5ம் தேதி ஒரு இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. சமூக வலைதளம் ஒன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தாக்குதல்...

அமெரிக்கத் தாக்குதல்...

மேற்கு ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினும் அவரக்ளுடன் பக்தாதி இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதை அப்பகுதியில் குடியிருப்போரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

பக்தாதியை குறி வைத்து...

பக்தாதியை குறி வைத்து...

மேலும் அக்டோபர் 11ம் தேதி நடந்த ஒரு தாக்குதல் பக்தாதியை குறி வைத்து நடந்ததாக ஈராக் விமானப்படை கூறியிருந்தது. இருப்பினும் பக்தாதி அதில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஈராக் ராணுவம்...

ஈராக் ராணுவம்...

அதேசமயம், பக்தாதி வேறு ஒரு நகருக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூட கூறப்படுகிறது. அவர் பலத்த காயமடைந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்றும் ஈராக் ராணுவம் கூறுகிறது.

போராட்டம் தொடரும்...

போராட்டம் தொடரும்...

இதுகுறித்து ஐஎஸ் ஆமைப்பைச் சேர்ந்த ஒருவர் ராய்ட்டருக்கு அளித்த பேட்டியில், ‘பக்தாதி இருந்தாலும், இறந்தாலும் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்' என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

English summary
Abu Bakr al-Baghdadi, the reclusive leader of the militant Islamic State group, at what is said to be his first public appearance at the grand mosque in Iraq's second city, Mosul, according to a video recording posted on the Internet on July 5, 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X