For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிம்பாப்வேவுக்குப் "பக்கத்து" நாட்டில்... காட்டில் கோஹ்லி ரெஸ்ட் எடுக்கிறாராம்.. அனுஷ்காவுடன்!

Google Oneindia Tamil News

கேப்டவுடன்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் விராத் கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் சத்தம் போடாமல் தென் ஆப்பிரிக்காவுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபலமான கிரகர் தேசிய பூங்காவில் காதலியுடன் ஓய்வில் இருந்து வரும் இதுகுறித்து இன்ஸ்டாகிராமிலும் ஒரு படத்தைப் போட்டுள்ளார்.

அவருடன் அனுஷ்காவும் தங்கியிருப்பதை அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டின் தலைமை சமையல்காரர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர் விளையாட்டு

தொடர் விளையாட்டு

தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வந்ததால் டயர்ட் ஆகிப் போன விராத் கோஹ்லிக்கு, ஜிம்பாப்வே தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனுஷ்காவுடன் தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பி விட்டார் கோஹ்லி.

காட்டுக்குள்ளே திருவிழா

காட்டுக்குள்ளே திருவிழா

அங்குள்ள கிரகர் தேசிய பூங்காவுக்குச் சென்றுள்ள அவர் அங்குள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி வனத்தின் அழகையும், வன விலங்குகளையும், கண்டு களித்து அமைதியாக ஓய்வெடுத்து வருகிறாராம் கோஹ்லி.

இன்ஸ்டாகிராமில் படம்

இன்ஸ்டாகிராமில் படம்

தனது ஓய்வு குறித்து ஒரு செல்பி படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார் கோஹ்லி. அதில், சில்லிங் இன் தி வைல்ட். பீஸ்புல் என்று போட்டுள்ளார். ஆனால் அப்படத்தில் அனுஷ்கா இல்லை.

நன்றி எஜமான் நன்றி!

நன்றி எஜமான் நன்றி!

ஆனால் அந்த ரிசார்ட்டின் தலைமை சமையல்காரர் அந்த படத்தை லைக் செய்து கமெண்ட் போட்டு காட்டிக் கொடுத்து விட்டார் கோஹ்லியுடன் அனுஷ்காவும் இருப்பதை.

மத்தவங்கெல்லாம் எங்கப்பா இருக்கீங்க?

மத்தவங்கெல்லாம் எங்கப்பா இருக்கீங்க?

கோஹ்லியைப் போலவே டோணி, அஸ்வின் போன்ற சீனியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயம் யாரும் காட்டுப்பக்கம் ஒதுங்கவில்லை என்று மட்டும் தெரிகிறது.

English summary
Virat Kohli may not be part of Indian cricket's tour to Zimbabwe but he is believed to be holidaying with Anuska Sharma in the neighbouring country of South Africa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X