For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க காதலி உங்களையே சுத்தி சுத்தி வரணும்னு ஆசைப்படுறீங்களா.. அப்ப இதை ட்ரை பண்ணுங்க!

நீங்கள் விரும்பும் பெண் உங்களை விரும்ப வேண்டும் என்றால் அதிக பழங்கள் மற்றும் கய்கறிகளை சாப்பிட வேண்டும் என சிட்னி பல்கலை கழகம் தன் ஆய்வில் தெரிவித்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சிட்னி: காய்கறிகள் மற்றும் நிறைய சாப்பிடும் ஆண்களின் உடலில் இருந்து நறுமணம் வெளியேறுவதால் அவர்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என சிட்னியில் உள்ள பல்கலை கழகம் மேற்கொண்ட ஆய்வில் கூறியுள்ளது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள ஈர்ப்புதான் இந்த உலகத்தையே சுற்ற வைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதனால் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி ஒருவரையொருவர் ஈஸியாக அட்ராக்ட் செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசிக்கின்றனர்.

அதற்காக தான் விரும்பும் இணைக்கு ஏற்ற வகையில் ஆடை அணிந்துகொள்வது, அதுவும் அவர்களுக்கு பிடித்த கலரில் ஆடை அணிவது, ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்வது, அலங்காரம் செய்துகொள்வது என ரொம்ப மெனக்கெடுகிறார்கள்.

ஒரு காதல் ஜோடி சந்திக்கின்ற நேரத்தில் பாதி நேரம் இந்த ஆடை, அலங்காரம் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள். இந்த டிரஸ் உனக்கு பிடிச்சிருக்கா? என்ற கேள்விதான் உரையாடலை தொடங்கும் கேள்வியாக இருக்கிறது.

அதுவும் சிலர் போட்டுக்கொள்ளும் பெர்ஃப்யூம் வாசனைக்கு ரசிகர்கள் கூட்டமே இருக்கும். இதற்காக காஸ்ட்லி பெர்ஃயூம்களை கடைகடையாக ஏறிச் சென்று வாங்குகின்ற ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்.

 பெர்ஃயூம்க்கு ஏன் அதிக விளம்பரம்?

பெர்ஃயூம்க்கு ஏன் அதிக விளம்பரம்?

ஒரு பெண்ணுக்கு ஆணின் உடலில் இருந்து வரும் நறுமணம் அவளை எல்லா வகையிலும் கிளர்த்தும் முக்கிய விஷயமாக இருக்கிறது. ஆகையால் தான் ஏகப்பட்ட பாடி டியோடரண்ட், பெர்ஃயூம் விளம்பரங்களாக இருக்கிறது. ஆனால் சிட்னியில் ஒரு பல்கலைக் கழகம் நீங்கள் காய்கறி பழங்கள் சாப்பிடும் ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது என கூறியுள்ளது.

 இதுக்கெல்லாம் ஆராய்ச்சியான்னு ஆச்சர்யமா

இதுக்கெல்லாம் ஆராய்ச்சியான்னு ஆச்சர்யமா

சிட்னியில் உள்ள மேக்கொயர் பல்கலை கழகத்தில் எந்த வகையான உணவுப் பழக்கவழக்கங்களை உடைய ஆண்களின் உடலிருந்து நறுமணம் வெளியேறுகிறது, எந்த நறுமணம் பெண்களை ஈர்க்கிறது என ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

 வெஜ்ஜா நான்- வெஜ்ஜா?

வெஜ்ஜா நான்- வெஜ்ஜா?

அந்த ஆய்வில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவுமுறையை ஒரு குரூப் ஆண்களை சாப்பிட வைத்துள்ளனர். மற்றொரு குரூப் ஆண்களை இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட வைத்துள்ளனர்.

 வியர்வை டெஸ்ட்

வியர்வை டெஸ்ட்

பிறகு இவர்களை டி- சர்ட் அணிய வைத்து உடல்பயிற்சி செய்யவைத்துள்ளனர். அதையடுத்து அவர்களின் உடலில் இருந்து வெளியேறிய வியர்வையுடன் கூடிய டி-சர்ட்டை பெண்களிடம் கொடுத்து முகர்ந்து பார்க்கக் கூறியுள்ளனர்.

 பெண்களை இதுதான் புடிச்சு இழுக்குதாம்

பெண்களை இதுதான் புடிச்சு இழுக்குதாம்

அதில் அதிக காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்ட ஆண்களின் உடலில் இருந்து வெளியேறிய வியர்வை பெண்களை ஈர்க்கும் மணத்துடன் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 காய்கறி, பழங்கள்

காய்கறி, பழங்கள்

ஆகையால், உங்கள் பெண் துணையை நீங்கள் ஈர்க்க வேண்டுமானால் நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிடுங்கள் என ஸ்டீபன் என்ற ஆய்வறிஞர் வலியுறுத்துகிறார். இப்ப நீங்க என்ன பண்ண சாப்பிடப் போறீங்க?

English summary
A university in Sydney revealed its research result and it showed men who loves veggie food, woman loves them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X