For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிக்கடி நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கில் உயிர் பலி.. இத்தாலிக்கு ஏன் இந்த நிலை?

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியி்ல் ஏன் அவ்வப்போது பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் காரணம் உள்ளது.

இத்தாலியில் 1908ம் தேதி, 7.2 என்ற ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம், மெச்சினா பகுதியை மையம் கொண்டு தாக்கியது. இதில் 70 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1915ல் ரிக்டரில் 7 என்ற அளவில் பதிவான நில நடுக்கத்தில் சிக்கி 32 ஆயிரத்து 610 பேர் உயிரிழநத்னர்.

Why Italy suffers earth quake oftenly

1919ல் 100 பேரும், 1920ல் 171 பேரும், 1930ல் 1404 பேரும், 1968ல் 231 பேரும், 1976ல் ஆயிரம் பேரும், 1980ல் 3 ஆயிரம் பேரும், 2009ம் ஆண்டு ஏப்ரலில் 295 பேரும் நில நடுக்கங்களால் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் அடியிலுள்ள பூமி தட்டில் ஏற்படும் நகர்தல் மோதிக்கொள்ளும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது இத்தாலிதான். இதுதான் அந்த நாட்டின் நிலநடுக்க பாதிப்பு பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

இந்நிலையில், இன்றைய நில நடுக்கத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நகரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், இத்தாலியின் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இடிபாடுகளில் மீட்பு பணி முடிநத் பிறகு, நாளைதான் சரியான நிலவரத்தை அதிகாரிகளால் தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

English summary
Italy's problems can be seen in the context of the great collision between the African and Eurasian tectonic plates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X