For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எய்ட்ஸை எதிர்த்து போராட 'ஷவர் செல்ஃபி சவால்': ஏற்க நீங்க ரெடியா?, ஆனால்...

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: எய்ட்ஸ் நோய் தடுப்புக்காக பாடுபடும் அமைப்புக்கு நிதி திரட்ட அமெரிக்க நடிகர் ஜாக் மெக்கன்ராத் ஷவர் செல்ஃபி சவாலை அறிமுகப்படுத்தியுள்ளார். ஷவர் என்பதால் தயவு செய்து யாரும் பளிச்சென்று நிர்வாணமாக குளியல் போட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு பிரச்சனை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அந்நோய்க்கான சிகிச்சைக்கு நிதி திரட்ட ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டு மிகவும் பிரபலம் ஆனது. இந்நிலையில் எய்ட்ஸ் நோயை தடுக்க, 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் வீடு இல்லாதவர்கள் என்ற நிலையே இருக்கக் கூடாது என்ற இலக்குடன் செயல்படும் ஹவுசிங் வொர்க்ஸ் அமைப்புக்கு 1 மில்லியன் டாலர் நிதி திரட்ட அமெரிக்க டிவி நடிகர் ஜாக் மெக்கன்ராத் முடிவு செய்துள்ளார்.

Will You Take the Shower Selfie Challenge to Fight AIDS?

எய்ட்ஸை தடுக்க நிதி திரட்ட என்ன செய்யலாம் என்று யோசித்த அவரின் மூளையில் ஒரு பல்பு எரிந்தது. இதையடுத்து அவர் குளியல் போடும் ஷவருக்கு அடியில் நின்று செல்ஃபி எடுத்தார். அதை வெளியிட்டு ஷவர் செல்ஃபி சவாலை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சவாலை ஏற்பவர்கள் ஷவருக்கு அடியில் நின்று குளிப்பதை செல்ஃபி எடுத்து வெளியிடுவதுடன் தானமும் செய்ய வேண்டும்.

இந்த செல்ஃபியை #weareALLclean என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஐஸ் பக்கெட் சவாலுக்கே பலர் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்கள். இந்நிலையில் ஷவர் செல்ஃபிக்கு யாரும் பளிச்சென்று நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டாம் என்று ஜான் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனம் பாண்டே, சோபியா ஹயாத் போன்றோருக்கு ஜாக்கின்(நிர்வாணம் வேண்டாம்) கோரிக்கை நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தும்.

English summary
American TV star Jack Mackenroth has introduced Shower Selfie Challenge to fight AIDS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X