For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் முதல் புத்தகமான ‘தி பே சாம் புக்’ 5 நிமிடத்தில் ரூ 87 கோடிக்கு ஏலம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக அச்சடிக்கப் பட்ட புத்தகம் என்ற பெருமையைப் பெற்ற, ‘தி பே சாம் புக்' என்ற புத்தகம் 5 நிமிடங்களில் ரூ87 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

அமெரிக்க ஏல நிறுவனமான சோத்பியில் நேற்று இப்புத்தகம் ஏலம் விடப்பட்டது. ஏலம் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே இப்புத்தகம் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப் பட்டது.

World's most expensive book sells for $14 million

தி பே சாம் புக்....

உலகின் விலை உயர்ந்த புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள 'தி பே சாம் புக்' அமெரிக்காவிலேயே முதல் முதலாவதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம்.

5 நிமிடத்தில்....

ஏலம் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே இந்த புத்தகத்தை 14 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரும், மனிதநேயவாதியுமான டேவிட் ரூபென்ஸ்டீன்.

87 கோடி ரூபாய்...

டேவிட் இப்புத்தகத்தை போன் மூலம் ஏலத்தில் எடுத்ததாக ஏல மையம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ஏலத்தொகை, சுமார் 87 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும்.

1640ம் ஆண்டு....

மாசேசூசெட்ஸ் மாகாண கேம்பிரிட்ஜில் 1640 ஆண்டு வசித்த புரிதான் குடியேறிகளால் 'தி பே சாம் புக்' என்ற பைபிளின் சங்கீத மொழிபெயர்ப்புகள் அடங்கிய இந்த புத்தகமே முதன் முதலில் அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட புத்தகம்.

மொழிபெயர்ப்பு....

மதச்சுதந்திரம் தேடி ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க வந்து குடியேறிய இவர்கள், யூதர்களின் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்து எழுதியது தான் இந்த புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The first book printed in what is today the United States of America sold for more than $14 million (Rs. 87 crores) at auction in New York on Tuesday, Sotheby's said, becoming the world's most expensive book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X