For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரவாணிகளுக்கு அமெரிக்காவின் பென்டகனில் வேலை இல்லை...ஓரினச் சேர்க்கையாளர்கள் ஓ.கே.!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அமெரிக்காவின் ராணுவத் தலைமயைகமான பென்டகன் எந்த ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லை. ஆனால் அரவாணிகளை மட்டும் அது தொடர்ந்து தீண்டத்தகாதவர்களாக கருதி வருகிறது.

அமெரிக்க முப்படையில் ஓரினச் சேர்க்கையாளர்கள், லெஸ்பியன்,பைசெக்ஸுவல்ஸ் எந்த நிலையிலும் பணியாற்றத் தடை இல்லை. அதேசமயம், அரவாணிகளுக்கு அங்கு ஒரு இடம் கூட கிடையாது. அனுமதியும் கிடையாது.

LGBT என்ற லெஸ்பியன், கே, பைசெக்ஸுவல் மற்றும் டிரான்ஸ்ஜென்டரில், கடைசியாக வரும் டிரான்ஸ் ஜென்டருக்கு மட்டும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் இன்னும் அனுமதி தராமல் உள்ளது. இந்த முரண்பாடான நிலை குறித்து பலரும் பென்டகனை விமர்சித்து வருகின்றனர்.

உடனடி டிஸ்மிஸ்...

உடனடி டிஸ்மிஸ்...

அதையும் மாறி யாராவது அரவாணித் தனமையுடன் கூடியவர்கள் படையில் இருந்தால் அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்றும் பென்டகன் கூறுகிறது.

கிறிஸ்டின் பெக்...

கிறிஸ்டின் பெக்...

ஆனால் அதையும் தாண்டி ஒரு அரவாணி அமெரிக்க கடற்படையில் பணியாற்றி ஓய்வும் பெற்றுள்ளார். அவரது பெயர் கிறிஸ்டின் பெக். கிட்டத்தட் 20 வருடம் இவர் அமெரிக்க படையில் பணியாற்றியுள்ளார். 13 முறை போர் முனையில் பங்காற்றியவர். பர்பிள் ஹார்ட் பதக்கம் வென்றவர். சீல் டிரைடென்ட் விருதும் பெற்றவர். சீல் படையில் பணியாற்றியவரான இவர் சீனியர் சீப் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

அரவாணியாக மாறியவர்...

அரவாணியாக மாறியவர்...

ஆனால் இவர் படையிலிருந்து விலகிய பிறகு முழுமையான அரவாணியாக மாறியுள்ளார். அதாவது ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறியவர் கிறிஸ்டின் பெக்.

ஓய்வுக்குப் பின்...

ஓய்வுக்குப் பின்...

தற்போது அவர் தனது கடற்படை அனுபவம் குறித்துக் கூறுகையில், நான் ஆணாக இருந்தபோது கடற்படையில் என்னவெல்லாம் சாதித்தேனோ அதையெல்லாம் இப்போது ஒரு பெண்ணாகவும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.. ஆனால் படையில் இருந்தபோது ஆணாகத்தான் இருந்தேன். படையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் பெண்ணாக மாறி விட்டேன் என்று கூறுகிறார் பெக்.

பெண்கள் வலிமையானவர்கள்...

பெண்கள் வலிமையானவர்கள்...

பெண்கள் வலிமையானவர்கள். சிறந்தவர்கள். ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். ஆண்களைப் போல அடித்து உதைக்க முடியும். எடையைத் தூக்க முடியும். எல்லாம் செய்ய முடியும் என்றார் அவர்.

14 ஆயிரம் பேர்...

14 ஆயிரம் பேர்...

கிறிஸ்டின் மட்டுமல்லாமல், தற்போதுஅமெரிக்க ராணுவத்தில் கிட்டத்தட்ட 14,450 பேர் அரவாணித் தன்மையுடன் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ராணுவ டாக்டர் ஒருவர் கூறுகிறார். ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது இயல்பை மறைத்தபடி, மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டு பணியாற்றுவதாக கிறிஸ்டின் பெக் கூறுகிறார்.

விருதுக்குத் தேர்வானவர்...

விருதுக்குத் தேர்வானவர்...

முன்பு ஆப்கானிஸ்தான் சேவையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை தொழில்நுட்ப நிபுணரான லேன்டன் வில்சனின் சேவைக்காக அவருக்கு விருது தர ராணுவம் முடிவெடுத்திருந்தது. ஆனால் விருது வாங்குவதற்குள் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டனர். காரணம், அவர் அரவாணி என்று தெரிய வந்ததால்.

மாலுமி...

மாலுமி...

இவர் பெண்ணாக இருந்து ஆணாக உருமாறியவர் ஆவார். இவர் கடற்படையில் மாலுமியாக பணியாற்றியவர் ஆவார். ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் பென்டகன், அரவாணிகளையும் அனுமதித்தால் என்ன என்ற குமுறல் தற்போது அதிகரித்து வருகிறது.

English summary
Three years after the repeal of Don’t Ask, Don’t Tell, the “T” in LGBT seems to have been left behind in military policy. Unlike gays, lesbians and bisexuals, openly transgender individuals can be kicked out of the military if their true identity becomes known. But any possible doubt about the suitability of transgender individuals for military service wouldn’t survive a meeting with Kristin Beck.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X