For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் அமெரிக்க கண்டத்தின் முதல் ஒலிம்பிக்.. ரியோ 2016.. சில சுவாரஸ்ய தகவல்கள்!

ரியோ: பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆக.5-ந் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது கோடைகால ஒலிம்பிக். இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் குறித்த சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

ரியோ ஒலிம்பிக் தொடங்கும் நாளை உலகம் முழுவம உள்ள ரசிககர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர். ரியோ ஒலிம்பிகானது ஆக.5-ந் தேதி தொடங்கி ஆக.21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி இது. இதற்கு முன்னர் வட அமெரிக்க கண்டத்தில் 6 முறையும், ஐரோப்பிய கண்டத்தில் 16 முறையும், ஆசிய கண்டத்தில் 3 முறையும், ஆஸ்திரேலிய கண்டத்தில் 2 முறையும் நடைபெற்றுள்ளன.

2009-இல் நடைபெற்ற ஏலத்தில் சிகாகோ, மாட்ரிட், டோக்கியோ ஆகிய நகரங்களை பின்னுக்கு தள்ளி இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றது ரியோ டி ஜெனீரோ.

தொடக்க விழா

தொடக்க விழா

ஒலிம்பிக் என்றாலே எப்போதும் முதலில் கோலகலமாக தொடக்க விழா இருக்கும். அந்த கோலாகலமாக கொண்டாடப்படும் தொடக்க விழாவிற்கான டிக்கெட்டின் அதிகபட்ச விலை இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.95,000.(பிரேசில் ரியல் 4600). குறைந்தபட்ச டிக்கெட் விலை என்றால் சுமார் ரூ.4000 (பிரேசில் ரியல்)

பட்ஜெட்

பட்ஜெட்

ரியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டானது, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டைக் காட்டிலும் 10 மடங்கு குறைவானதாம்.

தீபஜோதி ஏந்தும் வீரர்கள்

தீபஜோதி ஏந்தும் வீரர்கள்

12,000 வீரர்கள் ஒலிம்பிக் தீபஜோதியை ஏந்திச் செல்கின்றனர். அவர்கள் 26 மாநிலங்களிலும் கடந்து செல்வதன் மூலம்,பிரேசிலில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதத்தை அவர்கள் கடக்கவுள்ளனர்.

வீரர்கள்

வீரர்கள்

சுமார் 10,500 தடகள வீரர்கள் ஒலிபிக்கில் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக்கில் 306 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

நாடுகள் பங்கேற்பு

நாடுகள் பங்கேற்பு

ரியோ ஒலிம்பிக்கில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் நாடுகள் பங்கேற்கின்றன. 206 நாடுகள் தங்களது நாட்டின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வீரர்களை அனுப்வி வைத்துள்ளது.

ஒலிம்பிக் மெடல்

ஒலிம்பிக் மெடல்

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு 2,488 பதக்கங்கள் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாம். அதில் 812 தங்கம், 812 வெள்ளி மற்றும் 864 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்

நீண்ட தெலைவு நாடு

நீண்ட தெலைவு நாடு

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக குவாம் நாடு தான் வெகுதொலைவில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புகிறதாம்.

இளமை-முதுமை வீரர்கள்

இளமை-முதுமை வீரர்கள்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் வீரர் அமெரிக்காவைச் சேர்ந்த கனாக் ஜா. டேபுள் டென்னிஸ் வீரரான அவருக்கு 16 வயது மட்டுமே. அதிக வயதான வீரரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தான். 52 வயதான பிலிப் டட்டன் குதிரைப்பந்தயத்தில் பங்கேற்கிறார்.

75 லட்சம் டிக்கெட்டுகள்

75 லட்சம் டிக்கெட்டுகள்

ஒலிம்பிக்கில் நடத்தப்படும் போட்டிகளில் பார்வையாளர்களுக்காக சுமார் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளதாம். பார்வையாளர்கள் நிச்சயமாக போட்டிகளை கண்டு களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

2 புதிய விளையாட்டுகள்

2 புதிய விளையாட்டுகள்

ரியோ ஒலிம்பிக்கில் இந்த ஆண்டு புதியதாக இரண்டு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ள. 112 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் கோல்ப் விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளது. ரக்பி செவன்ஸ் முதல் முறையாக ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

450,000 காண்டம்

450,000 காண்டம்

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு காண்டம் வழங்கப்படுகிறதாம். இதற்காக 450,000 காண்டம் தயார் நிலையில் க்கப்பட்டுள்ளதாம். அதன்படி ஒரு வீரர்களுக்கு 42 காண்டங்கள் வழங்க முடியுமாம்.

3,604 குடியிருப்புகள்

3,604 குடியிருப்புகள்

11,000 வீரர்கள் மற்றும் 6,000 பயிற்சியாளர்கள் தங்கும் வகையில் அவர்களுக்காக 3,604 குடியிருப்புகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3,80,000 வெளிநாட்டினர்

3,80,000 வெளிநாட்டினர்

ஒலிம்பிக் போட்டிகளை கண்டு களிப்பதற்காக சுமார் 3,80,000 வெளிநாட்டு பார்வையாளர்கள் ரியோவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, July 28, 2016, 16:21 [IST]
Other articles published on Jul 28, 2016
English summary
As the Summer Olympics in Rio de Janeiro, Brazil, officially kick off with the opening ceremony on August 5, the first Olympic Games hosted by a South American country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X