For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊக்க மருந்து சர்ச்சை.. மேலும் 19 ரஷ்ய தடகள வீரர்களுக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

By Veera Kumar

மாஸ்கோ: ஊக்க மருந்து பயன்படுத்தியதாக, இன்று, மேலும் 19 ரஷ்ய தடகள வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரஷ்யாவை சேர்ந்த 108 தடகள வீரர்கள் இதுவரை தடைக்கு உள்ளாகியுள்ளனர். இது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 more Russian athletes banned from Rio Olympics, toll reaches 108

ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஷிய தடகள அணியின் பல வீரர்களை, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் 19 ரஷ்ய தடகள வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரஷ்யாவை சேர்ந்த 108 தடகள வீரர்கள் இதுவரை தடைக்கு உள்ளாகியுள்ளனர். இது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது அவமானப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளார் ரஷ்ய ரோவிங் கூட்டமைப்பு தலைவர் வெனியமின். நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இருப்பினும் போராட்டத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம். ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இது சம்மந்தமாக ஆலோசனை நடத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 27, 2016, 20:34 [IST]
Other articles published on Jul 27, 2016
English summary
Ninteen more Russian rowers were banned from the Olympics, taking the toll of the nation's athletes suspended from Rio to 108 after explosive revelations of state-run doping across Russian sport.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X