For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ப்ப்ப்பா.. 25 வருஷத்தில் 100 பேருடன் ஜோடி போட்ட லியாண்டர்

நாட்டிங்காம்: இந்திய டென்னிஸின் சச்சின் என்று லியாண்டர் பயஸைக் குறிப்பிடலாம். காரணம், சச்சினைப் போலவே நீண்ட நெடுங்காலம் டென்னிஸ் ஆடி வருபவர் பயஸ். அதேபோல சச்சினை போலவே இவரும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இதோ புதிய சாதனையாக கடந்த 25 வருடத்தில் 100 பார்ட்னர்களுடன் அவர் இரட்டையர் ஆட்டத்தில் ஆடி புதிய வரலாறு படைத்துள்ளார்.

பயஸின் டென்னிஸ் வரலாற்றில் எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் சாதனைதான். ஆடவர் டென்னிஸ் வரலாற்றில் பயஸ் அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

இப்போது 100 வெவ்வேறு பார்ட்னர்களுடன் இரட்டையர் போட்டிகளில் மோதிய சாதனையைப் படைத்துள்ளார் பயஸ்.

நாட்டிங்காமில் 100வது பார்ட்னர்

நாட்டிங்காமில் 100வது பார்ட்னர்

நாட்டிங்காமில் நடந்த ஏகன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் மார்சல் கிரனோலர்ஸுடன் ஜோடி சேர்ந்தார் லியாண்டர். மார்சல், லியாண்டருக்கு 100வது பார்ட்னர் ஆவார். இப்போட்டியில் பஸ் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மகேஷ்தான் பெஸ்ட்

மகேஷ்தான் பெஸ்ட்

100 ஜோடிகளில் மகேஷ் பூபதிதான் லியாண்டருடன் இணைந்து வெற்றிகரமாக திகழ்ந்தவர் ஆவார். இருவரும் இணைந்து 3 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளனர். பயஸ் வென்ற ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகும்.

ஸ்டெபானக்குடன் 2

ஸ்டெபானக்குடன் 2

ரடெக் ஸ்டெபானக், மார்ட்டின் டாம் ஆகியோருடன் இணைந்து தலா 2 பட்டங்களை வென்றுள்ளார் பயஸ். லூகாஸ் லோஹியுடன் இணைந்து ஒரு பட்டத்தை வென்றுள்ளார்.

எல்லாமே செக்

எல்லாமே செக்

என்ன ஆச்சரியம் என்றால் ரடெக், டாம், லூகாஸ் ஆகிய 3 பேருமே செக் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்பு 46 பேர்

இவருக்கு முன்பு 46 பேர்

இதுவரை உலக அளவில் 46 வீரர்கள் 100 பார்ட்னர்களுடன் விளையாடிய சாதனையைப் படைத்துள்ளனர். 47வது வீரராக லியாண்டர் பட்டியலி்ல இணைந்துள்ளார்.

700 வெற்றிகள்

700 வெற்றிகள்

மேலும் டென்னிஸ் போட்டிகளில் மொத்தம் 700 வெற்றிகளைப் பெற்று இந்த சாதனையைப் படைத்த வீரர்கள் வரிசையில் 8வது வீரராக இணைந்துள்ளார் பயஸ்.

ஆனால் பயஸ்தான் பெஸ்ட் அன்ட் பர்ஸ்ட்

ஆனால் பயஸ்தான் பெஸ்ட் அன்ட் பர்ஸ்ட்

இருப்பினும் 700 வெற்றிகளையும், 50 பட்டங்களையும் வென்ற ஒரே வீரர் பயஸ்தான். அந்த வகையில் இது புதிய சாதனையாகும்.

Story first published: Thursday, June 25, 2015, 17:57 [IST]
Other articles published on Jun 25, 2015
English summary
India's tennis hero Leander Paes has added yet another milestone to his terrific career, which is full of achievements, as the veteran pro has now played with 100 different partners on the ATP circuit. When Paes took court with Marcel Granollers at the Aegon Open in Nottingham, yesterday, the Spaniard was his 100th partner. They reached the quarterfinals after eking out a 3-6 6-2 11-9 win over Treat Huey and Scott Lipsky.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X