For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊக்க மருந்து சர்ச்சையில் இந்திய தடகள வீரர் இந்திரஜித்சிங்.. ரியோ ஒலிம்பிக் கனவு தகர்கிறது?

By Veera Kumar

டெல்லி: ரியோ ஒலிம்பிற்கு தகுதி பெற்றிருக்கும் தடகள வீரர் இந்திரஜித்சிங் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில நாட்கள் முன்புதான், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற குத்துச் சண்டை வீரர் நர்சிங் யாதவ் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில் இது மற்றொரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

பொய்யான குற்றச்சாட்டு தன்மீது சுமத்தப்பட்டதாக, நர்சிங் யாதவ் குமுறியுள்ள நிலையில், இந்திரஜித்சிங்கும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

வெள்ளி பதக்கம்

வெள்ளி பதக்கம்

28 வயதாகும் இந்திரஜித் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவர் இவர்.

28 வயதாகும் இந்திரஜித் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவர் இவர்.

சோதனை

சோதனை

தேசிய பயிற்சி முகாம்களில் பங்கேற்காமல், சொந்த பயிற்சியாளரை கொண்டு பயிற்சி எடுத்து வருபவர் இந்திரஜித். கடந்த 22ம் தேதி இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து

ஊக்க மருந்து

தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இந்திரஜித் உடலில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

7 நாளில் டெஸ்ட்

7 நாளில் டெஸ்ட்

இன்னொரு ரத்த பரிசோதனை நடத்த இந்திரஜித் விரும்பினால் 7 நாட்களுக்குள் அதை செய்ய வேண்டும் என்று ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி கெடுவிதித்துள்ளது. இரண்டாவது சோதனையிலும், இந்திரஜித் ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது உறுதியானால் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி கிடைக்காது.

4 வருடம் அம்பேல்

4 வருடம் அம்பேல்

மேலும், மாற்றப்பட்ட புதிய விதிமுறைகள்படி, 4 வருடங்களுக்கு அவரால் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த ஊக்கமருந்து பிரச்சினைகளால் வெலவெலத்து கிடக்கிறது, இந்திய ரியோ ஒலிம்பிக் போட்டியாளர்கள் கூடாரம்.

Story first published: Tuesday, July 26, 2016, 14:29 [IST]
Other articles published on Jul 26, 2016
English summary
Just a few days after wrestler Narsingh Yadav was caught for doping, another Rio Olympics qualified athlete Inderjeet Singh, a shot putter, has failed a dope test as his 'A' sample returned positive for a banned substance.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X