For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை மைதானத்தில் கால் வைக்கும்போதே டோணி பெயரில் ஒரு சாதனை சேரப்போகிறது!

By Veera Kumar

தர்மசாலா: மேற்கிந்திய தீவுகளுடனான நாளைய ஒருநாள் போட்டியில் மைதானத்தில் இறங்கியதுமே டோணியின் பெயருக்கு பின்னால் ஒரு சாதனை சேரப்போகிறது.

அதாவது, 250வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 8வது இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் டோணி பெற உள்ளார்.

டோணி 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம்தேதி வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களம் கண்டவர் டோணி. இதுவரை 249 ஒன்டே மேட்ச் ஆடியுள்ள டோணி, 8 ஆயிரத்து 186 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 சதங்கள், 56 அரை சதங்கள் அடங்கும்.

Captain Dhoni set for milestone match in Dharamsala

இந்திய வீரர்களிலேயே அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பெருமை சச்சின் டெண்டுல்கருடையது. 463 போட்டிகளில் சச்சின் ஆடியுள்ளதால், இந்த வகையில் அது உலக சாதனையும் கூட.

344 மேட்சுகளுடன் ராகுல் டிராவிட் 2வது இடத்திலும், 334 போட்டிகளில் ஆடிய அசாருதீன், 311 போட்டிகளில் ஆடிய கங்குலி, 293 போட்டிகளுடன் யுவராஜ்சிங் ஆகியோர் முறையே 3 முதல் 5 இடங்களை பிடிக்கின்றனர்.

அனில் கும்ப்ளே 271 மேட்சுகளுடன் 6வது இடத்திலும், சேவாக் 251 மேட்சுகளுடன் 7வது இடத்திலும் உள்ள நிலையில், டோணி நாளை 250வது போட்டியில் பங்கேற்று, இந்த பட்டியலில் 8வது இடத்தை தக்க வைத்துக்கொள்ள உள்ளார்.

Story first published: Thursday, October 16, 2014, 18:08 [IST]
Other articles published on Oct 16, 2014
English summary
Dhoni, when he walks out for the toss against West Indies in the 4th ODI here at the HPCA Stadium tomorrow (October 17), he will be playing his 250th ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X