For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"அண்ணன்" விராத் கோஹ்லியின் அமோக ஆதரவு பெற்ற ஜெர்மனிக்கு முதல் வெற்றி..!

லில்லி, பிரான்ஸ்: யூரோ கோப்பை கால்பந்துத் தொடரில் தனது முதல் போட்டியில் ஜெர்மனி அணி உக்ரைனை 2-0 என்ற கோல் கணக்கில் விரட்டியடித்தது.

உலக சாம்பியனான ஜெர்மனியே இப்போட்டியில் வெற்றி பெறும் என்று பலரும் ஏற்கனவே கணித்திருந்தனர். இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லியும் ஜெர்மனிக்கு தனது ஆதரவைத் தெரிவித்து டிவிட்டும் போட்டிருந்தார். அதற்கு ஜெர்மனி அணியும் நன்றி சொல்லியிருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட ஜெர்மனி, உக்ரைனை வெளுத்து வாங்கி வெற்றி பெற்றது.

Clinical Germany begin Euro campaign with 2-0 win over Ukraine

ஜெர்மனி அணியின் ஸ்கோட்ரன் முஸ்தபி முதல் பாதியிலும், பாஸ்டியன் ஸ்வீன்ஸ்டீகர் 2வது பாதியிலும் ஒரு கோலடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வைத்தனர்.

சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் தனது முதல் போட்டியில் உக்ரைனைச் சந்தித்தது. லில்லி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஜெர்மனி திட்டமிட்டு ஆடியது. மிகத் தெளிவாக அதன் உத்திகள் இருந்தன. 3 முறை யூரோ கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி 4வது முறையாக கோப்பையை வெல்ல களம் குதித்துள்ளது.

தொடக்கத்திலிருந்தே பந்தை ஜெர்மனி வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முதல் பாதியிலேயே அது 1-0 என்ற அளவில் முன்னணியில் இருந்தது அந்த அணிக்கு உத்வேகம் அளித்தது. மேலும் உக்ரைனை இந்தப் போட்டியுடன் சேர்த்து 6 முறை சந்தித்துள்ளது ஜெர்மனி. ஒரு முறை கூட உக்ரைன் வென்றதில்லை என்பதால் ஜெர்மனி வீரர்கள் மன ரீதியாகவும் தைரியமாக உக்ரைனை சந்தித்தனர்.

வலிமை வாய்ந்த ஜெர்மனியை எதிர்த்து மோதிய போதிலும் உக்ரைன் அணியும் நல்ல போட்டியைக் கொடுத்தது. ஜெர்மனி அணி கோலடித்து விடாமல் தடுக்க கடுமையாக முயன்று போராடினர் உக்ரைனியர்கள். இதனால்தான் பெரிய அளவில் கோல் மழை பொழியாமல் போய் விட்டது. அந்த வகையில் 2 கோல்களை மட்டுமே உக்ரைன் கோல் கீப்பர் விட்டுக் கொடுத்து அணியின் மானத்தை பெரிய அளவில் காப்பாற்றி விட்டார்.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் முஸ்தபி முதல் கோலைப் போட்டார். அதன் பின்னர் மேலும் ஒரு கோலடிக்க ஜெர்மனி கடுமையாக முயன்றது. ஆனால் முதல் பாதி முடியும் வரை அதை உக்ரைன் வீரர்கள் அனுமதிக்கவில்லை. 2வது பாதியிலிலும் இரு அணிகளும் போராடின. உக்ரைன் அணி கோலடிக்க முயன்றதைக் காட்டிலும் கோல் விழுந்து விடாமல் தடுக்கவே அதிக கவனம் செலுத்தியது. இந்த நிலையில் பாஸ்டியன் இன்னொரு கோலடித்து ஜெர்மனியின் வெற்றியை உறுதியாக்கி, வலிமையாக்கி விட்டார்.

Story first published: Monday, June 13, 2016, 12:18 [IST]
Other articles published on Jun 13, 2016
English summary
Goals on either half by Shkodran Mustafi and Bastian Schweinsteiger assisted world champions Germany to a 2-0 win over Ukraine in their Group C opener at Euro 2016 on Sunday (June 12) in their bid for a record fourth European crown.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X