For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் வேற.. இவர் வேற... டோணி, கோஹ்லி குறித்து கங்குலி கருத்து!

By Veera Kumar

சிட்னி: டோணி மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவரின் தலைமை பண்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

டோணியிடமிருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பு விராட் கோஹ்லியிடம் சென்றுள்ள நிலையில், கங்குலி கூறியதாவது: டோணி அல்லது கோஹ்லி இருவரில் யார் சிறப்பான கேப்டன் என்ற கேள்விகள் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வருகின்றன. ஆனால் அவ்வாறு ஒப்பிடுவது சரியில்லை. கோஹ்லி இப்போதுதான் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதற்குள்ளாக ஒருவரின் திறமையை யூகத்தின் அடிப்படையில் கூற முடியாது.

ஆக்ரோஷக்காரர்

ஆக்ரோஷக்காரர்

அதே நேரம் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமானவர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பு உள்ளவர். எனவே வருங்காலங்களில் அவரால் இந்தியா பல வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

லைன்&லென்த் முக்கியமப்பா..

லைன்&லென்த் முக்கியமப்பா..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பந்து வீச்சாளர்கள் அடிப்படையாக செய்ய வேண்டியவற்றை தவறவிட்டனர். இறுதி டெஸ்டில் ஆஸி. வீரர் ஹசில்வுட் 8 ஓவர்கள் வீசி, 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் வேறு எதையும் புதுமையாக செய்யவில்லை. சரியான அளவில், சரியான உயரத்தில் பந்துகளை வீசினார். ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதை தொடர்ந்து செய்ய தவறிவிட்டனர்.

அஸ்வின் திருத்திக்கொள்ள வேண்டும்

அஸ்வின் திருத்திக்கொள்ள வேண்டும்

இந்திய பந்து வீச்சில் அஸ்வின் மட்டும் ஓரளவுக்கு பங்களிப்பை அளித்துள்ளார். 3 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 10 விக்கெட்டுகள், கடைசி இரு டெஸ்டுகளில் வந்தவைதான். அஸ்வின் ஆப்-ஸ்டெம்புக்கு வெளியே பந்துகளை வீசுவதை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு ரகமாக வீசுவதை அஸ்வின் குறைத்துக் கொள்ள வேண்டும்.

திறமையை பயன்படுத்துங்கள்

திறமையை பயன்படுத்துங்கள்

இந்திய பந்து வீச்சாளர்கள் ஒரே நாள் இரவில் முன்னேற்றம் கண்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் நன்றாக பந்து வீசுவது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் போல கஷ்டமானதும் கிடையாது. ஆஸி. சுற்றுப்பயணம் இந்திய பவுலர்களுக்கு நல்ல படிப்பினையை அளித்திருக்கும். இந்திய வேகப்ந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக 140 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்யும் திறன் கொண்டவர்கள். எனவே அதை நல்லபடியாக வீசுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலக கோப்பைக்கு சிறந்த தேர்வு

உலக கோப்பைக்கு சிறந்த தேர்வு

உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சிறப்பாக உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் விளையாடி சோர்வுற்றுள்ள இந்திய வீரர்களை கருத்தில் கொண்டு தேர்வுக்குழு, கலவையாக வீரர்களை தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

டோணி அருமையான ஆட்டக்காரர்

டோணி அருமையான ஆட்டக்காரர்

டோணி மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர். அவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை தக்க வைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

Story first published: Tuesday, January 13, 2015, 11:51 [IST]
Other articles published on Jan 13, 2015
English summary
The comparisons will be inevitable but former Indian skipper Sourav Ganguly on Sunday said it is unfair to equate the leadership skills of Mahendra Singh Dhoni and newly-appointed Test captain Virat Kohli, who will only become better with experience.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X